தமிழகத்தில் நாளை "ரெட் அலெர்ட்"..! 4 மாவட்டங்களில் மிக மிக கனமழை எச்சரிக்கை..!

By ezhil mozhiFirst Published Oct 21, 2019, 4:21 PM IST
Highlights

கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது... இதன் காரணமாக அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

தமிழகத்தில் நாளை "ரெட் அலெர்ட்"..! 4 மாவட்டங்களில் மிக மிக கனமழை எச்சரிக்கை..! 

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட இந்த 4 மாவட்டங்களில் நாளை மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுத்து உள்ளது. 

கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது... இதன் காரணமாக அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த 3 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலையில் ககுளு இப்படி ஒரு குளு குளு கிளைமேட்டை என்ஜாய் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை(22.10.19) மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என 4 மாவட்டங்களை குறிப்பிட்டு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு  உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் ரெட் எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கவனமாக இருப்பது நல்லது. மற்ற மாவட்டங்களை பொறுத்தவரையில் ரெட் அலெர்ட்  எச்சரிக்கை இல்லை என்றும், மிதமான மழை பெய்ய மட்டுமே வாய்ப்பு உள்ளது என்றும், எனவே பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

அதி கனமழை என்பதால் நான்கு மாவட்டங்களையும் சிவப்பு நிறத்தால் குறிப்பிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது...இந்த 4 மாவட்டங்களில் 21 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

click me!