World Sleep Day 2024 : இரவில் சரியாக தூங்கலனா இந்த பிரச்சினைகள் வருமாம்.. ஜாக்கிரதை!

Published : Mar 15, 2024, 02:50 PM ISTUpdated : Mar 15, 2024, 03:05 PM IST
World Sleep Day 2024 : இரவில் சரியாக தூங்கலனா இந்த பிரச்சினைகள் வருமாம்.. ஜாக்கிரதை!

சுருக்கம்

ஆரோக்கியமாக இருக்க நல்ல தூக்கம் மிகவும் அவசியம். அத்தகைய சூழ்நிலையில், தூக்கமின்மை காரணமாக உடலில் சில அறிகுறிகள் காணப்படுகின்றன. அவை..

பகல் முழுவதும் வேலை செய்து அழுத்து போய் இருப்பவர்கள் இரவில் நிம்மதியான உறக்கத்தை பெற விரும்புகிறார்கள். பலருக்கும் தூங்குவது என்றாலே ரொம்பவே இஷ்டம். நல்ல மற்றும் முழுமையான தூக்கம் ஆரோக்கியமாக இருக்க பெரிதும் உதவுகிறது. உங்களுக்கு தெரியுமா...நமது உணவுப் பழக்கம் நமது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறதைப் போலவே, நமது தூக்கமும் நமது ஆரோக்கியத்தைப் பாதிக்குமாம்.. இத்தகைய சூழ்நிலையில், தூக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் தூக்கம் தொடர்பான கோளாறுகளைத் தடுப்பது மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் தான் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமை "உலக தூக்க தினம்' கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலானோர், வேலை மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக,  தங்கள் தூக்கத்தை புறக்கணிக்கிறார்கள். இதன் விளைவு நம் ஆரோக்கியத்தை தான் பாதிக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு போதுமான தூக்கம் வருகிறதா இல்லையா? என்பதை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். போதுமான தூக்கம் இல்லாதது, பெரும்பாலும் நம் உடலில் பல சமிக்ஞைகளை அளிக்கும். அவற்றை அறித்து உடனே சரி செய்வது மிகவும் முக்கியம். இதனால் நமது தூக்க முறையை சரியான நேரத்தில் மேம்படுத்த முடியும்.

நாள் முழுவதும் சோர்வாக உணர்வது: நீங்கள் தூங்கிய பிறகும் நாள் முழுவதும் சோர்வாக உணர்ந்தால், உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லை என்பதற்கான உன்னதமான அறிகுறியாகும்.

கவனத்தை பாதிக்கும்: உங்களுக்கு தெரியுமா... தூக்கமின்மை உங்கள் கவனத்தை பெரிதும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, கவனம் செலுத்துவது, கற்றுக்கொள்வது மற்றும் பிற விஷயங்களை நினைவில் கொள்வதை கடினமாக்கும்

மன அழுத்தம், பதட்டம்: உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லை என்றால், அது உங்களை எரிச்சல், மனநிலை மற்றும் மன அழுத்தம், பதட்டம் அல்லது மனச்சோர்வுக்கு உள்ளாக்கும்.

மோசமான உடல் பிரச்சனைகள்: தூக்கமின்மை தலைவலி, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, அதிகப்படியான பசி மற்றும் எடை அதிகரிப்பு போன்ற உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தோல் பிரச்சினைகள்: கருவளையம், மெல்லிய கோடுகள் போன்ற தோல் பிரச்சனைகள் இருந்தால், அது உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லை என்பதற்கான அறிகுறியாகும்.

இதையும் படிங்க:  நல்லா தூங்குங்க.. ஊழியர்களுக்கு லீவ் கொடுத்த நிறுவனம்.. சர்வதேச தூக்க தினத்துக்கு இப்படி ஒரு கிப்ட்

எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?
வெவ்வேறு நபர்களுக்கு தூக்கத்தின் தேவைகளும் வேறுபடுகின்றன. தூக்கத்தின் தேவை வயதுக்கு ஏற்ப மாறுபடும். இருப்பினும், பெரும்பாலான பெரியவர்களுக்கு தினசரி 7-8 மணிநேர தரமான தூக்கம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு அதிகம் தேவை. 

இதையும் படிங்க:   World sleep day 2022: அட...தூக்கத்தையும் கொண்டாட ஒரு நாள் இருக்கா..? தூக்கத்தை பற்றிய சுவாரஸ்யமான பதிவு ..

நல்ல மற்றும் முழுமையான தூக்கத்திற்கு இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்:

  • நல்ல தூக்கத்திற்கு, இரவு தூங்குவது முதல் காலை எழுவதற்கான நேரத்தை குறித்து ஒவ்வொரு நாளும் அதை பின்பற்றுங்கள்.
  • இரவு தூங்க செல்வதற்கு முன் புத்தகம் வாசிப்பது அல்லது சூடான குளியல் போன்ற செயல்களை முயற்சிக்கவும்.
  • உங்கள் படுக்கையறை தூங்குவதற்கு ஏற்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அறை இருட்டாகவும், அமைதியாகவும், குளிராகவும் இருக்க வேண்டும்.
  • உறங்கும் முன் எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம்,ல். ஏனெனில் அவற்றில் இருந்து வெளிப்படும் நீல ஒளி தூக்க முறைகளை சீர்குலைக்கும்.
  • இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற, பகலில் மற்றும் தூங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்யுங்கள்.
  • தூங்கும் முன் கனமான செயல்பாடுகளை செய்வதைத் தவிர்க்கவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Push-Ups : இந்த '1' உடற்பயிற்சியை தினமும் காலைல பண்ணாலே 'உடலில்' பல மாற்றங்கள் வரும்
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!