ஆண்களே, பெண்களே இனிமேல் இதை செய்யாதீங்க...அதிர்ச்சியளிக்கும் புதிய ஆய்வு...எச்சரிக்கும் மருத்துவ வல்லுநர்கள்..

Anija Kannan   | Asianet News
Published : Jun 01, 2022, 01:33 PM IST
ஆண்களே, பெண்களே இனிமேல் இதை செய்யாதீங்க...அதிர்ச்சியளிக்கும் புதிய ஆய்வு...எச்சரிக்கும் மருத்துவ வல்லுநர்கள்..

சுருக்கம்

Tobacco Warning: 2022 ஆம் ஆண்டின் சமீபத்திய ஆய்வின் படி, புகை பழக்கத்தால் இந்தியாவில் மட்டும், ஓர் ஆண்டில் சுமார் 13.5 லட்சம் பேர் (8 வினாடிக்கு ஒருவர்) பலியாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் சமீபத்திய ஆய்வின் படி, புகை பழக்கத்தால்  இந்தியாவில் மட்டும், ஓர் ஆண்டில் சுமார் 13.5 லட்சம் பேர் (8 வினாடிக்கு ஒருவர்) பலியாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

புகையிலை வாசகங்கள்:

சிகிரெட் பாக்கெட்டுகள் தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை, புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், புகையிலை உயிரைக் கொல்லும், புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் என்ற வாசகங்கள் பல இடங்களில் இடம்பெற்றிருக்கும். இதனால், மாற்றங்கள் ஏதும் இல்லை நாளுக்கு, நாள் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து செல்வதாக ஆய்வுகள் பல குறிப்பிடுகின்றன. 

இந்தியாவில் புகை பிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:

இந்தியாவில் புகை பிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்து வருவதாகவும், புகை பிடிப்பவர்களில் 94 சதவீதம் பேர் அதை முற்றிலுமாக கைவிடத் தயாராக இல்லை எனவும் புகையிலை கட்டுப்பாட்டு மதிப்பீட்டு திட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக புகையிலைப் பயன்பாடு பரவிக் கிடக்கிறது. புகையை உள்ளே இழுத்து வெளிவிடும் போது, டோபமைன் மற்றும் எண்டோர்பின்கள்  வெளிவரும் நிலையில் அவை புகை பிடிக்கும் நபருக்கு இன்பத்தைத் தூண்டி அந்தப் பழக்கத்திற்கு மூளையை அடிமையாக்கும் என்று ஆய்வுகள் சுட்டி காட்டுகின்றனர். 

புகையிலை பிடிப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்:

இதன் விளைவாக, நுரையீரல் பிரச்சனை, இதயத்தின் துடிப்பு அதிகரித்தல், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகை செய்யும். புற்றுநோய் வருவதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனால் உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்.

சமீபத்திய ஆய்வின் முடிவில்:

இந்தியாவில் கடந்த 20018 முதல் 2020ஆம் ஆண்டுவரை 49 சதவீதம் ஆண்களும் 11 சதவீதம் பெண்களும் புகைபிடித்து வந்த நிலையில் தற்போது அது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.  2022 ஆம் ஆண்டின் சமீபத்திய ஆய்வின் படி, புகை பழக்கத்தால் இந்தியாவில் மட்டும், ஓர் ஆண்டில் சுமார் 13. 5 லட்சம் பேர் ( 8 வினாடிக்கு ஒருவர்) பலியாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், புகையிலை பழக்கத்தால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் ஆண்கள் 25% , பெண்கள் 10 % பேர் ஆவார்கள். நாடு முழுவதும் சுமார் சுமார் 12 கோடி பேர் புகை மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் 75 % பேர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக மாறிவிட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க.....KK death Heart attack: இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்..? நிபுணர்களின் பொதுவான 5 காரணங்கள்...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்