பிரேக் போட்டது ஒரு குத்தமா...? கோவை சரளா பாணியில்...அரசு பஸ் டிரைவரை பறந்து அடித்த பெண்..!வைரல் வீடியோ ..!

Anija Kannan   | Asianet News
Published : Feb 14, 2022, 02:09 PM ISTUpdated : Feb 15, 2022, 11:26 AM IST
பிரேக் போட்டது ஒரு குத்தமா...? கோவை சரளா பாணியில்...அரசு பஸ் டிரைவரை பறந்து அடித்த பெண்..!வைரல் வீடியோ ..!

சுருக்கம்

கோவை சரளா பாணியில், அரசு பஸ் டிரைவரை பெண் ஒருவர் புரட்டி எடுக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

கோவை சரளா பாணியில், அரசு பஸ் டிரைவரை பெண் ஒருவர் புரட்டி எடுக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 
 உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம். சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், அப்படியான பெண் ஒருவரின் செயல் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

ஆந்திராவில் உள்ள சூர்யராவ்பேட்டையில், சமீபத்தில் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று அவரை லேசாக உரசி சென்றுள்ளது. இதனால், அந்த பெண்ணுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.  எனவே, ஆத்திரம் அடைந்த அந்த பெண் அரசு பேருந்தை, நிறுத்தி உள்ளே சென்று ஓட்டுனரை சரமாரியாக தாக்கியுள்ளார். 

தொடர்ந்து, அந்த பெண் அரசு பேருந்து டிரைவரை தாக்கியும் மற்றும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் திட்டியுள்ளார்.  மேலும், அவருடைய சட்டையை கிழித்து, காலால் எட்டி உதைத்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளனர். பிறகு, அந்த பெண் பேருந்தில் இருந்து இறங்கி கீழே சென்றுள்ளார். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பெண், விதிகளை மீறி ராங் ரூட்டில் எதிரில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்து லேசாக மோதியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், டிரைவரை தாக்கிய பெண், கிருஷ்ணா லங்காவின் தாரக ராம நகரில் வசிக்கும் கே நந்தினி என்பதும் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான, வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த பெண்ணின் செயயை வீடியோவில் பார்த்த நெட்டிசன்கள் பலரும், அந்த பெண் கோவை சரளா மாதிரி, அரசு பஸ் டிரைவரை புரட்டி அடித்துள்ளார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும், சிலர் இந்த பெண்ணின் செயல் கண்டிக்கத்தக்கது என்று தனது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்