பயனாளர்கள் அதிர்ச்சி... நாளை முதல் ஃபேஸ்புக், ட்விட்டருக்கு தடையா?

By Kanimozhi PannerselvamFirst Published May 25, 2021, 11:03 AM IST
Highlights

புதிய விதிகளுக்கு இணங்காத சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தங்களில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான செய்திகள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஓடிடி தளங்கள் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் கடந்த பிப்ரவரி 25ம் தேதி ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியது. 

சமூக வலைத்தளங்கள் விதிகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாதம் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள தலைமை அலுவலகங்கள் அனைத்தும் எவ்வித அறிவுறுத்தலும் விடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

எனவே புதிய விதிகளுக்கு இணங்காத சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கூ ஆப் மட்டுமே மத்திய அரசின் சமூக ஊடக வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதாக அறிவித்துள்ளது. 

இந்த புதிய விதிகளில் இணக்க அதிகாரிகளை நியமித்தல், இந்தியாவில் அவர்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை அளித்தல், புகார் தீவு, ஆட்சேபணைக்குரிய உள்ளடக்கத்தை கண்காணித்தல், ஆட்சேபிக்கத்தக்க உள்ளடகத்தை நீக்குதல் உள்ளிட்டவை அடங்கும். ஆனால் இதுவரை எந்த ஒரு சோசியல் மீடியா நிறுவனமும் அப்படி ஒரு அதிகாரியை நியமிக்கவில்லை என்பது தெரிகிறது. 
 

click me!