ஒரு சினைப்பையை அகற்றினால் குழந்தை பிறக்காதா?

 
Published : Jun 05, 2017, 03:54 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
ஒரு சினைப்பையை அகற்றினால் குழந்தை பிறக்காதா?

சுருக்கம்

Will Child is not born once you removed one part?

ஜெயாவிற்கு  வயது ,30. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன; 'தனக்கு பின்னே திருமணமானோருக்கு எல்லாம் குழந்தை பிறந்துவிட்டது' என ஏங்கித் தவிப்பார்.  ஜெயாவிற்கு  வயிற்று வலி ஏற்பட்டது . அவரும் வயிற்று வலிக்காக, அருகிலிருக்கும் மருந்துக் கடையில், வாயு பிரச்னை அல்லது அஜீரணக் கோளாறாக இருக்கலாம் என எண்ணி, வலி நிவாரணிகளை வாங்கித் சாப்பிட்டு இருக்கிறார்.

வலி மாத்திரைகளை சாப்பிட்டதும், வலி குறைந்துவிடும். ஆனால், மீண்டும் வயிற்று வலி வந்து பாடாய்படுத்தும். எனவே, ஆலோசனைக்காக மருத்துவரிடம் வந்திருந்தார். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை செய்திருக்கிறார் . அதில், வயிற்றுவலிக்கான காரணம் தெரிந்தது. மல்லிகாவின் இடது பக்க சினைப்பையில் கட்டி ஒன்று இருந்தது. அது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என திசு பரிசோதனை செய்திருக்கிறார். அதில், மல்லிகாவிற்கு இருப்பது சாதாரண கட்டி தான் என தெரிய வந்தது.

, அறுவை சிகிச்சை இல்லாமல், குணப்படுத்த முடியாது என்பதால், அறுவை சிகிச்சை மூலம், இடது பக்க சினைப்பையிலுள்ள கட்டியை அகற்றியிருக்கிறார். அறுவை சிகிச்சை முடிந்து, மல்லிகா நலமடைந்து விட்டார். அவருக்கு இப்போது இருக்கும் சந்தேகமெல்லாம், பெண்களுக்கு இருக்கும், இரண்டு சினைப்பைகளில், ஒன்றை எடுத்தாகி விட்டது. மீதமிருக்கும் ஒரு சினைப்பையில் கருமுட்டைகள் உருவாகுமா; தன்னால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியுமா என்பதே. பெண்ணின் உடலில் வலது, இடது என, இரு சினைப்பைகள் உள்ளன. ஏதாவது ஒரு சினைப்பை பாதிக்கப்பட்டு அகற்றினாலும், கருமுட்டைகள் உருவாவது குறைந்துவிடும். இருந்தாலும், மீதமுள்ள மற்றொரு சினைப்பை மூலம், கரு முட்டைகள் உருவாகும் என்பதால், கட்டாயம் கருத்தரிக்கலாம். சினைப்பையில் கட்டிகள் உருவாக மருத்துவ காரணங்கள் இதுவரை கண்டறியவில்லை. எட்டு மாதங்கள் கடந்த நிலையில், மாதவிடாய் தள்ளி போயிருக்கிறது; இது, தாய்மையின் அடையாளமா என நினைத்ததோடு பரிசோதனை  செய்ததில் உறுதியானது என மருத்துவர் கூறியதும் ஜெயா சந்தோசப்பட்டார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Winter Constipation Remedies: குளிர்காலத்தில் மலச்சிக்கல் தொந்தரவு கஷ்டமில்லாம 'காலைக்கடனை' முடிக்க சூப்பர் டிப்ஸ்
Weight Lifting For Women : பெண்கள் கண்டிப்பா 'எடை' தூக்கும் பயிற்சி செய்யனும்!! அதோட நன்மைகள் அவ்ளோ இருக்கு