கணவனின் சடலம் தன்னுடன் பயணிப்பது தெரியாமலேயே பயணம் செய்த கர்ப்பிணி மனைவி.!!

Published : Mar 17, 2020, 09:28 PM ISTUpdated : Mar 18, 2020, 12:10 AM IST
கணவனின் சடலம் தன்னுடன் பயணிப்பது தெரியாமலேயே பயணம் செய்த  கர்ப்பிணி   மனைவி.!!

சுருக்கம்

ஓமனில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்த மனைவிக்கு ,தன் கணவனின் சடலம் தான் பயணிக்கும் விமானத்தில் தான் வருகிறது என்று தெரியாமலேயே பயணம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

T.Balamurukan

ஓமனில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் வந்த மனைவிக்கு ,தன் கணவனின் சடலம் தான் பயணிக்கும் விமானத்தில் தான் வருகிறது என்று தெரியாமலேயே பயணம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டம், சுழலி கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது சகீர், இவருக்கும் ஷிஃபானாவுக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது. முதன்முறையாகக் கணவருடன் மஸ்கட் சென்ற ஷிஃபானா இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, மஸ்கட்டில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சகீர் இறந்துவிட்ட தகவலை அவரின் நண்பர்கள் ஷிஃபானாவிடம் தெரிவிக்கவில்லை.

 சகீருக்கு, கொரோனா வைரஸ் தொற்றிவிட்டதாகவும் அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும்,
மருத்துவமனையில் எவரும் அவரைப் பார்க்க முடியாது என்பதால் ஷிஃபானா ஊர் திரும்புமாறு அவரது நண்பர்கள் ஒரு வழியாக சமாதனப்படுத்தி அவரை கேரளாவுக்கு விமானத்தில் ஏற்றிவிட்டனர்.மஸ்கட்டில் இருந்து கோழிக்கோடு சென்ற அந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலேயே சகீரின் சடலமும் ஏற்றி அனுப்பப்பட்டது. ஆனாலும், வீடு வந்து சேரும் வரை ஷிஃபானாவுக்கு சகீரின் மரணம் பற்றி தெரியாமல் பார்த்துக்கொண்டனர் அவரது நண்பர்கள்.

கேரளா வந்ததும் ஷிஃபானாவுக்கு சகீர் இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது,இதனால் அந்த குடும்பமே கதறி துடித்தது. 3மாதம் கர்ப்பமாக இருக்கும் ஷிஃபானாவுக்கு யாருமே ஆறுதல் சொல்லமுடியாமல் சோகத்தை மட்டுமே சுமந்து கொண்டிருந்தார்கள்.


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்