
கணவன் மனைவி ஒரே போர்வையில் உறங்குவது தவறில்லை. ஆனால், உன் நீளமான கால்கள் முழு போர்வையை உருவி எடுத்துக் கொண்டு சென்றுவிடுகிறது. வீட்டில் கூடுதலாக ஐந்தாறு போர்வைகள் இருக்கும் போதும், ஒற்றை போர்வையில் தான் தினமும் உறங்க வேண்டுமா?
அவளுடன் பழகி என்னை ஏமாற்ற எப்படி உனக்கு மனது வந்தது?
என் வாழ்வில் எப்போதும், எதிலும் உனக்கே முதலிடம். ஆனால், உன் வாழ்வில் எப்போதும் என்னை இரண்டாம் பட்சமாக வைத்துப் பார்ப்பது ஏன்?
மனைவியை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது தான் கணவனின் தலையாயக் கடமை. ஆனால், நீ என்னை பாதுகாக்க அக்கறை காட்டியதில்லையே
உன் தீண்டுதல், அன்பு, அரவணைப்பை எதிர்பார்க்கிறேன். ஆனால் வேலை என்ற பெயரில் என்னை மறப்பது நியாயமா? வர வர வாழ்க்கை அலுத்து போகிறது.
புதியதாக எதையும் கேட்டுவிடவில்லை. இருவரும் உறவில் இணைந்த ஆரம்பக் கட்டத்தில் நீ என் மீது காட்டிய அன்பு, அக்கறை, முன்னுரிமை, முக்கியத்துவம் கொடுத்தால் போதும்.
நீ ஏன் நான் கூறுவதை காதுக் கொடுத்து கேட்பதே இல்லை. நீ எனக்கு துணையாக இருப்பதற்கு பதில் அரசனாக அல்லது பாஸாக இருக்க பார்க்கிறாய்.
இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது நீ மட்டும் அது ஏன் அப்படி இருக்கிறது, இது ஏன் இப்படி இருக்கிறது என கேள்வி கேட்பதற்குப் பதில் சீரமைக்க முயற்சிக்கலாமே?
நீ ஏன் பார்ன் படங்கள் பார்க்கிறாய்? நீ வேறு ஒரு பெண்ணின் உடலை ரசிப்பது போல நான் வேறு ஆணின் நிர்வாண உடலை ரசிக்கலாமா?
எப்போது தான் நீ எடுத்த பொருளை, எடுத்த இடத்திலேயே வைக்க கற்றுக் கொள்ள போகிறாய்? இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் நீ உன் பிரிந்த காதலியின் ஃபேஸ்புக் முகவரியை தேடிப்பிடித்து லைக் போட்டுக்கொண்டே இருக்கப்போகிறாய்.
என் மின்னஞ்சல், ஃபேஸ்புக், மொபைல் பாஸ்வர்ட் வரை உனக்கு எல்லாமே தெரியும். ஆனால், உன் மொபைலை மட்டும் ஏதோ சிதம்பர இரகசியம் போல பாதுகாப்பது ஏன்?
உன் தவறுகளை நான் அமைதியாக, பொறுமையாக உனக்கு மட்டும் கேட்கும் படி எடுத்துரைக்கும்போது, நீ என் தவறுகளை காட்டுக்கத்தல் மூலம் ஊரறியச் செய்வது ஏன்?
அரவணைப்பையும், பாசத்தையும் எதிர்பார்க்கும் நான் வேலைக்காரியாகவும், பாலியல் தொழிலாழியாகவும் தான் இருக்கிறேன் என்பதை நீ உணரவில்லையா?
நண்பர்கள் சூழ்ந்திருக்கும் மனைவியை ராட்சசி போன்றும், அடங்காப்பிடாரி போன்றும் சித்தரிப்பது என்ன சுபாவம். நான் ஒருபோதும் அப்படி நடந்துக் கொண்டதே இல்லையே?
என்னை விட உனக்கு வேலை தான் முக்கியம் அல்லது வாழ்வின் பிராதான விஷயம் என்றால்.., நீ என்னை திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாமே. என்ன உணவு வேண்டும் என கேட்கும் போது உன் விருப்பம் என்று கூறிவிட்டு. சமைத்த பிறகு உணவை விமர்சனம் செய்வது ஏன்?
சிக்ஸ் பேக் ஆசை எல்லாம் இல்லை எனினும் நீ கட்டுக்கோப்பான உடல்வாகுடன், ஆரோக்கியமான உணவுண்டு ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுகிறேன்.
நீ விரும்பும் போது மட்டும் தான் கலவ வேண்டும் என்பதும் ஆணாதிக்கம் தான் என்பதை நீ அறிவாயா?
என் மனம் புண்படும் படியாக நீ தொடர்ந்து கேலிகள் செய்து வருவதும் ஒருவகையான கொடுமையே. நீ பேசும் அதே வார்த்தைகளை கொண்டு நீ மற்றும் உன் உறவுகளை நான் கேலி கிண்டல் செய்தால் நீ என்னை விவாகரத்து செய்திருப்பாய்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.