நோயே இல்லாமல் 100 ஆண்டுகள் வாழ வேண்டுமா? இந்த உணவுகளில் மூன்றை சாப்பிடுங்கள் போதும்!

By thenmozhi gFirst Published Oct 29, 2018, 12:34 PM IST
Highlights

சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானதா? இல்லையா? என அதில் உள்ள சத்துக்கள்தான் நிர்ணயிக்கின்றன. 

சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானதா? இல்லையா? என அதில் உள்ள சத்துக்கள்தான் நிர்ணயிக்கின்றன. 

சோடியம்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உடலில் அமிலத்தின் அளவை சீராக வைக்கவும் உதவுகிறது. ஆனால் இதனை அதிகளவில் எடுத்துக்கொள்ளக்கூடாது. உப்பு, ஊறுகாய், மோர், தர்பூசணி போன்றவற்றில் அதிகம் உள்ளது.

பொட்டாசியம்

உடலுக்கு தேவையான புரோட்டின்களை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கார்போஹைட்ரேட்டையும் சரியான அளவில் கிடைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் அவசியமானது. உருளைக்கிழங்கு, தக்காளி, ப்ரோக்கோலி, ஆரஞ்சு போன்றவற்றில் அதிகம் உள்ளது.

பாஸ்பரஸ்

செரிமானம் சீராக இருக்க பாஸ்பரஸ்தான் முக்கியமானது. உடலில் ஹார்மோன்கள் சமநிலை அடையவும், எலும்புகள் வலிமையடையவும் உதவுகிறது பீன்ஸ், சோளம், பீனட் பட்டர் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

ஜிங்க்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பெண்கள் கருத்தரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. முந்திரி, சுண்டல், பட்டாணி, சிக்கன் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

மக்னீசியம்

உடலுக்கு தேவையான குளுக்கோஸ் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தையும், சீரான இதய ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை தடுப்பதோடு இன்சுலின் அளவையும் சீராக்குகிறது. சாக்லேட், முந்திரி, பாதாம் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

இரும்புச்சத்து

ஹீமோக்ளோபினின் அளவில் முக்கியப்பங்கு வகிக்கிறது, இரத்தத்தில் இருந்து நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குவதும் இதுதான். இரும்புச்சத்து குறைவது இரத்தசோகை, இரத்த இழப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். சுண்டல், பூசணி விதைகள், எள், திராட்சை போன்றவற்றில் அதிகம் உள்ளது.

அயோடின்

தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிற்கு அவசியமானது. அயோடின் அளவு குறையும்போது சோர்வு, மனஅழுத்தம் உயர் கொழுப்பு போன்றவை ஏற்படும். தைராய்டு பிரச்சினையையும் ஏற்படுத்தும். இறால், உப்பு, வேகவைத்த முட்டை, ஸ்ட்ராபெரி, தயிர் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

காப்பர்

திசுக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான கொலாஜன் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் சீரான இதயத்துடிப்பிற்கும் அவசியமானது. காளான், முந்திரி, அவோகேடா, பீன்ஸ் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

கோபால்ட்

வைட்டமின் பி12-ன் முக்கிய பகுதியான இது கோபால்மின் எனப்படுகிறது. உடலின் சீரான இயக்கத்திற்கு சிறிதளவு கோபால்ட் மட்டும் அவசியம். முட்டை, பால், இறைச்சி, ப்ரோக்கோலி, கீரை போன்றவற்றில் உள்ளது.

கால்சியம்

எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. கால்சியத்தின் அளவு குறைந்தால் எலும்புருக்கி நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. பால், சீஸ், தயிர், கீரை, சுண்டலில் அதிகம் உள்ளது.

click me!