சிகரெட் புகைக்கும் பழக்கத்தை கைவிட வேண்டுமா? இதப்படிங்க முதல்ல!

Published : Oct 28, 2018, 12:57 PM IST
சிகரெட் புகைக்கும் பழக்கத்தை கைவிட வேண்டுமா? இதப்படிங்க முதல்ல!

சுருக்கம்

புகைபிடிப்பது மதுவை விட கொடிய பழக்கம். ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் எனத் தெரிந்தும் விட முடியாமல் தவிப்பர்கள் பலர். 

புகைபிடிப்பது மதுவை விட கொடிய பழக்கம். ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் எனத் தெரிந்தும் விட முடியாமல் தவிப்பர்கள் பலர். எந்தப் பழக்கமாக இருந்தாலும் மனம் முடிவு செய்துவிட்டால், தவறைச் செய்யும் போது செய்யாதே என மூளை கட்டளையிடும். அதன் மூலம் பழக்கத்தை விட்டுவிட முடியும். ஆனால் மூளைக்கும் கட்டுப்படாதது புகைப்பழக்கம்.

சில உணவுகள் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகைபிடிப்பவர்கள் மட்டுமன்றி பழக்கம் இல்லாதவர்கள், பழக்கத்தை விட்டவர்கள் என 680 பேரிடம் ஐரோப்பிய மருத்துவ இதழுக்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அப்போது நுரையீரல் செயல்பாடுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. புகைப்பழக்கத்தை மருந்தின் மூலம் நிறுத்திய பின், 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் நுரையீரல் செயல்பாடுகள் சீராக இல்லாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது. ஆய்வு முடிவில் மருந்துகளை விட தக்காளி, வாழைப்பழம், ஆப்பிள் ஆகிய மூன்றும் புகைப்பழக்கத்தை விட்டுவிட உதவுததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தக்காளி

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகளில் முக்கியமானது தக்காளி தக்காளியில் அதிக ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. லைகோபைனும் அதிகமாக உள்ளது. நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.

வாழைப்பழம் 

வாழைப்பழத்திலும் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உள்ளன. இதுவும் நுரையீரலைப் பாதுகாக்கும். 

ஆப்பிள் 

ஆப்பிளும் நுரையீரலுக்கு நல்லது. ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நுரையீரலுக்கு நலம் அளிப்பதோடு  சுவாசப் பிரச்சினைகளையும், மூச்சுத் திணறலையும் நீக்குகிறது. இதுபோன்ற ஆன்டி- இன்ஃபிளமேட்ரி திறன் கொண்ட காய்கறிகள், பழங்களும் நுரையீரல் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும்.

தக்காளி, வாழைப்பழம், ஆப்பிள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளத் தொடங்கியபின் புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் நுரையீரலில் நச்சுக்களை வெளியேற்றத் தொடங்குவதோடு நுரையீரலில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்குவதாகவும் கூறுகிறார்கள்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்