கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மணற்காடு என்ற பகுதியில் வசித்து வருபவர் அபிலாஷ். இவர் செப்டெம்பர் 2 ஆம் தேதியன்று வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
"பசிக்குது சோறு போடுமா"..! சீரியல் பார்க்கும் போது டிஸ்டர்ப் செய்ததால் கணவனை கத்தியால் ஒரே வெட்டு வெட்டிய மனைவி...!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மணற்காடு என்ற பகுதியில் வசித்து வருபவர் அபிலாஷ். இவர் செப்டெம்பர் 2 ஆம் தேதியன்று வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டில் அவருடைய மனைவி மிகவும் பிசியாக சீரியல் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அந்த தருணத்தில் அபிலாஷ் "எனக்கு பசி எடுக்கிறது.. சோறு போடு" என கேட்டுள்ளார்.
மனைவியோ.. கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள் என சொல்லவே, இப்படியே சில நிமிடங்கள் கழிந்து உள்ளது. பின்னர் மீண்டும் மீண்டும் 'எனக்கு பசிக்குது சோறு போடு' என கணவன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
எனக்கு மிகவும் பசிக்கிறது சோறு போடாமல் அப்படி என்ன டிவி பார்க்க வேண்டியிருக்கிறது என கணவர் சண்டை போட்டுள்ளார். கோபமடைந்த மனைவி அருகில் இருந்த ஒரு கத்தியை எடுத்து கணவனை தாக்கி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.