அரசு பள்ளி மாணவர்களுக்கு குஷியான செய்தி..! அமைச்சர் செங்கோட்டையன் கொண்டுவர உள்ள அதிரடி மாற்றங்கள்..!

By ezhil mozhiFirst Published Sep 5, 2019, 5:47 PM IST
Highlights

உயர் நிலை கல்வி படிக்கும் போதே தொழில் கல்வியை கற்றுக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிடுகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு குஷியான செய்தி..! அமைச்சர் செங்கோட்டையன் கொண்டுவர உள்ள அதிரடி மாற்றங்கள்..!  

பின்லாந்து நாட்டில்  7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது... பள்ளிக் கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவர உள்ளது என்பது குறித்த தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டார்.

"தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொழில் கல்வியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,  பின்லாந்து நாட்டில் படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளவேண்டும் சமூகத்தில் எப்படி தன்னை உயர்த்திக் கொள்வது உள்ளிட்டவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக... அவர்களுடைய பாடமும் கற்பிக்கும் முறையும் உள்ளது.

உயர் நிலை கல்வி படிக்கும் போதே தொழில் கல்வியை கற்றுக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிடுகின்றனர். அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையும் போது பெற்றோரின் தயவு இல்லாமலேயே சுயமாக வாழ கற்றுக் கொள்கிறார்கள். பின்லாந்து நாட்டில் ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையை தமிழகத்திற்கும் கொண்டுவர முயற்சி  மேற்கொள்ளப்படும்.. அதற்காக இங்கிருந்து பின்லாந்து நாட்டிற்கு 3 மாதம் பயிற்சிக்காக ஆசிரியர்களை அனுப்புவதற்கும் அதேபோன்று பின்லாந்து நாட்டு ஆசிரியர்களை தமிழகத்திற்கு வருகை புரிய ஏதுவாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்... இங்கு அரசு பள்ளியில் கற்பிக்கப்படும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பின்லாந்து நாட்டு பள்ளி நூலகங்களில் வைக்கப்படும்.. அங்குள்ள தமிழ்பேசும் மாணவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.

தமிழகத்திலும் மாணவர்கள் படிக்கும் போதே தொழில் கல்வியையும் படிக்கும் வகையில் புதிய பாடத் திட்டமாக தொழில் கல்வியை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. இது தவிர கல்வி முறையில் சில மேற்கொள்ளப்படும் என தெரிவித்து உள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

click me!