Mobile Recharge : பொதுவாக நாம் ரீசார்ஜ் செய்யும் பொழுது 28 நாட்கள் அல்லது 56 நாட்கள் என்று ஒரு மாதத்தில் உள்ள நாள்களை விட கம்மியான நாள்களுக்கு தான் ரீசார்ஜ் செய்ய முடியும். அது ஏன் என்று தெரியுமா?
ஒரு காலகட்டத்தில் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்ட தொடக்கத்தில் மிக குறைந்த அளவிலான செல்போன் சேவை நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது இந்திய அளவில் பல நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருப்பதால், அதில் தங்களுடைய சேவை சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, பெரிய அளவிலான சலுகைகளை தினமும் அறிவித்து வருகின்றது செல்போன் சேவை நிறுவனங்கள்.
ஆனால் என்ன தான் செல்போன் நிறுவனங்கள் அதிரடியாக விலையை குறித்து கவர்ச்சிகரமான சலுகைகளை கொடுத்தாலும், ஒரு ரீசார்ஜ் என்பது 28 நாள் 56 நாள் 84 நாள் என்று தான் இருக்கும். எதுவுமே 30, 60, 90 நாள் என்று முழுமையாக ஒரு மாதத்தை குறிக்கும் அளவிற்கு இருக்காது. இது ஏனென்று நாம் யோசித்தால், நிச்சயம் இதற்கென்று ஒரு விடை கிடையவே கிடையாது. செல்போன் நிறுவனங்களை தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டாலும் இதற்கு அவர்களிடம் பதில் கிடைக்காது என்பது தான் பலருடைய பதில்.
undefined
இலவச டேட்டா & நெட்பிளிக்ஸ்.. நம்ப முடியாத தீபாவளி ஆஃபர்.. எந்த ரீசார்ஜ் பிளான்?
ஆனால் உண்மையில் செல்போன் நிறுவனங்கள் இப்படி செய்ய காரணம் என்ன என்று பார்க்கும்போது சில விஷயங்கள் புலப்படுகிறது. அதாவது சலுகைகளை பெறிய அளவில் கொடுப்பதால், தங்களுடைய லாபத்தை அதிகரிக்க செல் போன் நிறுவனங்கள் இப்படி செய்வதாக கூறப்படுகிறது. சரி அப்படி நாள்களை குறைத்து வழங்குவதில் அவர்களுக்கு என்ன லாபம்?
ஒரு வருடத்திற்கு ஏழு மாதங்களில் 31 நாட்கள் உள்ளது, ஆகவே அந்த 28 நாட்களை 31 நாட்களில் கழித்தால் அதிலேயே வருடத்திற்கு நமக்கு 21 நாட்கள் வந்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் பிப்ரவரியில் உள்ள 28 நாளை தவிர்த்து மீதம் 30 நாள்கள் உள்ள 4 மாதங்களை கணக்கிடும் பொழுது அதில் ஒரு 8 நாட்கள். இப்பொது 21 + 8 = 29 நாள்கள் ஆகிறது.
ஆகமொத்தம் நீங்கள் ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்யும்பொழுது உங்களை பொறுத்தவரையிலும் அது 12 மாதங்களாக இருந்தாலும், ரீசார்ஜ் நிறுவனங்களை பொறுத்தவரை அது 13 மாதங்களாகவே கணக்கிடப்படுகிறது. அவர்களை பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு ஒரு மாதம் கூடுதல் லாபம் கிடைக்கிறது. ஒருவேளை இது தான் அப்படி நாள்களை குறைவாக கொடுக்க உண்மையான காரணமாக இருக்குமோ? என்று நம்மை நினைக்கவைக்கிறது. ஆனால் உண்மையில் செல் போன் நிறுவனங்கள் அப்படி செய்ய என்ன காரணம் என்று எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
பாஸ் நீங்க நடந்தா மட்டும் போதும்; பணம் கொட்டும்; இத மட்டும் செய்யுங்க!!