தீபாவளியன்று எந்த நேரத்தில் புத்தாடை அணிய வேண்டும் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Oct 24, 2019, 3:37 PM IST
Highlights

தீபாவளி கொண்டாடட்டத்திற்கு வெளியூர் செல்ல செல்வதற்கும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதை தாண்டி சென்னை தி நகரில் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு கூட்ட நெரிசல் அதிகமாக  உள்ளது. 
 

தீபாவளியன்று எந்த நேரத்தில் புத்தாடை அணிய வேண்டும் தெரியுமா..? 

ஐப்பசி மாதம் 10 ஆம் தேதி, அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட  உள்ளது. தீபாவளியை முன்னிட்டு மக்கள் புத்தாடை எடுப்பதும், இனிப்பு பண்டங்கள் செய்வதற்கும் ஆர்வம் காண்பித்து கடைகளில் அலை மோதுகின்றனர். 

அதே போன்று தீபாவளி கொண்டாடட்டத்திற்கு வெளியூர் செல்வதற்கும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதை தாண்டி சென்னை தி நகரில் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. 

இந்த  ஒரு தருணத்தில் வரும் தீபாவளி ஞாயிறுக்கிழமை அன்று வருவதால் அனைவரும் கொண்டாடும் ஓர் அற்புத வாய்ப்பாக அமைந்து உள்ளது.
சரி வாங்க... இவ்வளவு உற்சாகமாக தீபாவளி கொண்டாட உள்ள நாம் .. அன்றைய தினத்தில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த விஷயங்களை செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி சித்திரை நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் தைல ஸ்நானம், கங்கா ஸ்நானம் செய்துகொள்ளலாம். காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சுக்ர ஹோரையில் தீபாவளி பண்டிகை புத்தாடை உடுத்துதல் நல்லது.

அதே தினத்தில் ஸர்வ அமாவாசை கேதார கௌரி விரத பூஜை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் குரு ஹோரையில் லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.எனவே மக்களே இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்.

click me!