திருப்பதி கோவில் வாசலில் விக்னேஷ் சிவனுடன் - நயன்தாரா..! முக்கிய முடிவு..?

Published : Oct 24, 2019, 02:11 PM ISTUpdated : Oct 24, 2019, 02:59 PM IST
திருப்பதி கோவில் வாசலில் விக்னேஷ் சிவனுடன் - நயன்தாரா..! முக்கிய முடிவு..?

சுருக்கம்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவ்வவ்போது வெளிநாடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக சில நாட்களை கழிப்பது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் ஆதரவையும் எண்ணற்ற கேள்விக்கும் ஆளாவார்கள். 

திருப்பதி கோவில் வாசலில் விக்னேஷ் சிவனுடன் - நயன்தாரா..! முக்கிய முடிவு..? 

நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்ற செய்தி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

அந்த ஒரு தருணத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவ்வவ்போது வெளிநாடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக சில நாட்களை கழிப்பது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் ஆதரவையும் எண்ணற்ற கேள்விக்கும் ஆளாவார்கள். இப்படி ஒரு தருணத்தில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறார்கள் என்ற செய்தியும் பார்த்து இருப்போம். 

ஏற்கனவே இந்த ஆண்டு இறுதிக்குள் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடைபெறும் என பேசப்பட்டு இருந்தது. இந்த ஒரு தருணத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து உள்ளனர். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை செய்து பிரசாதங்களை வழங்கியுள்ளனர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அதற்கு சிரித்தபடியே நயன்தாராவும் தன்னுடைய ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கோவிலுக்கு சென்று உள்ள இந்த புகைப்படம் தற்போது இவர்களின் திருமணத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்
குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் '6' உணவுகளின் லிஸ்ட்