Plants vastu: வீட்டில் மறந்து கூட இந்த செடிகளை வைக்க வேண்டாம்..!மீறினால் தரித்திரம் தாண்டவம் ஆடுமாம்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 24, 2022, 06:50 AM ISTUpdated : Feb 24, 2022, 06:59 AM IST
Plants vastu: வீட்டில்  மறந்து கூட இந்த செடிகளை வைக்க வேண்டாம்..!மீறினால் தரித்திரம் தாண்டவம் ஆடுமாம்..!!

சுருக்கம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டில்  சில செடிகள் மற்றும் மரங்களை வைப்பது பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும் என்கின்றது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டில்  சில செடிகள் மற்றும் மரங்களை வைப்பது பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும் என்கின்றது.

மரங்கள் மற்றும் செடிகள் என்றால், எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். நம்முடைய வீட்டின் மொட்டை மாடி, தோட்டம், பால்கனி போன்ற இடங்களில் வைப்பதால் வீட்டின் அழகு மென்மேலும், அதிகமாகும். தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.உடலும், மனமும் ஆரோக்கியத்துடன் இருக்கும். மொத்தத்தில், மரங்கள் மனித வாழ்க்கையின் அடிப்படையாகும், மரங்களும் செடிகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

மரங்களுக்கும் செடிகளுக்கும் வாஸ்துவில் ஒரு தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் தொடர்பான பல விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில செடிகள் மற்றும் மரங்கள் பிரச்சனையையும் தரித்திரத்தையும் நம்முடைய வீட்டிற்கு கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இன்று அந்த வகையான செடிகள் மற்றும் மரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பால் வடியும் தாவரங்கள்:

வாஸ்து சாஸ்திரத்தின் படி, பால் வடியும் செடிகளையும் மரங்களையும் ஒருபோதும் வீட்டில் வைக்கக்கூடாது. அதாவது செடியின்  இலையை அல்லது கிளையை ஒடித்தால் அதில் இருந்து பால் போன்ற ஒட்டும் பொருள் வெளியே வரும் வகையிலான செடிகள் அல்லது மரங்கள் வீட்டில் வைப்பது உசிதமல்ல. இந்த செடிகளை வீட்டில் வைத்தால், அது ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கம் வீட்டில் தரித்திரத்தையும், குழப்பமான சூழ்நிலையை உருவாக்கக் கூடும்.

புளிய மரம்:

புளியஞ்செடியை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது. வீட்டைச் சுற்றி புளிச் செடியை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தில் நல்லதாக கருதப்படுவதில்லை. இது உங்கள் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை ஏற்படுத்தலாம். மேலும், குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

பேரீச்சை மரம்:

பேரீச்சை  மரத்தை வீட்டில் வைப்பதும் தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது.  வாஸ்து படி, பேரீட்டை மரத்தை வீட்டில் வளர்த்தால் பண விரயம் ஏற்படும் என கூறப்படுகிறது. மேலும், இந்த வீட்டில் பணம் தங்குவதில்லை.  நீங்கள் பணம் விஷயம் தொடர்பாக பல இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும்.

இலந்தை மரம்:

வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி, வீட்டில் இலந்தை மரம் வைப்பது மிகவும் எதிர்மறையான தாக்கத்தை தரும் என்று நம்பப்படுகிறது. இந்த மரம் உங்கள் வீட்டிற்கு வறுமையை கொண்டு வரலாம். மேலும் வீட்டில் ஏற்படும் எதிர்மறை தாக்கத்தினால், வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

செடிகளை அதிர்ஷ்டம் உண்டாக்கக் கூடிய செடி வகைகள், துரதிர்ஷ்டத்தை தரும் செடி வகைகள் என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.

அந்த வகையில், வீட்டின் முன்னால் வளர்க்க கூடாத செடிகள்:

வீட்டின் முன்னால் அரளிச் செடியை கட்டாயம் வளர்க்கக் கூடாது என்கிறார்கள். அரளிச் செடி தெய்வீக குணங்களை கொண்டது அல்ல. அரளிச் செடி தோஷ நிவர்த்திக்காக பயன்படுத்தி வருகின்றனர். பூஜைகளிலும், அர்ச்சனைகளும் அரளிப் பூ பயன்பட்டாலும் அதை வீட்டின் முன்னால் வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல.

அரளிச்செடி தோட்டம், வீட்டின் பின்புறம் போன்ற பகுதிகளில் வைத்து வளர்க்கலாம். வீட்டின் முன்னால் அரளிச் செடி வளர்ப்பவர்களுக்கு அக்கம் பக்கத்தினர் ஆதரவும், நட்பும் பிரச்சனையாகவே எப்போதும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவும்.

மாற்றாக, துளசி செடிகள், மருதாணி போன்ற வாசனை மிக்க மலர்களும், தெய்வீக குணங்களும், நல்ல அதிர்வலைகளை உண்டாக்க வல்லதுமான செடிகளை நிலைவாசல் படியின் நேரெதிரே வீட்டிற்கு முன்னால் வளர்த்து வந்தால் அந்த வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பார்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்