இப்பவும் சந்தேகம்? 21 நாட்களில் எது இயங்கும்? எது இயங்காது..விவரம் பாயிண்ட் பாயிண்டா இருக்கு பார்த்துக்கோங்க!

By ezhil mozhiFirst Published Mar 25, 2020, 3:34 PM IST
Highlights

ஒட்டு மொத்த நாட்  மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு உள்ள 21 நாட்களில் எது இயங்கும்? எது இயங்காது என்பதை தெரிந்துகொள்ளலாம்  

இப்பவும் சந்தேகம்? 21 நாட்களில் எது இயங்கும்? எது இயங்காது..விவரம் பாயிண்ட் பாயிண்டா இருக்கு பார்த்துக்கோங்க!

21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு என்பதால் எது இயங்கும்? எது இயங்காது... என இன்னும் மக்களுக்கு ஒரு வித சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், எது இயங்கும் எது இயங்காது என்பதை விட நாம் எதற்காக வெளியில் செல்ல வேண்டும்... எதற்காக  வெளியில் செல்ல கூடாது என்பதில் இருக்கிறது முக்கிய விஷயம்.

ஒட்டு மொத்த நாட்டு மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு உள்ள 21 நாட்களில் எது இயங்கும்? எது இயங்காது என்பதை தெரிந்துகொள்ளலாம்  

21 நாட்களுக்கு ஊரடங்கு

உள்துறை அமைச்சகம் அறிக்கை

எவையெல்லாம் செயல்படும்

வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள்,

கேபிள் டி.வி, இன்டர்நெட்,

தொலைதொடர்பு,

காப்பீட்டு நிறுவனங்கள்

காய்கறிகள், பால்,

நியாயவிலை கடைகள்,

இறைச்சிகடைகள்,

காட்சி ஊடகங்கள்

அச்சு ஊடகங்கள்

பெட்ரோல் நிலையங்கள்

சமையல் எரிவாயு நிறுவனங்கள்

ஓட்டல்கள்

தங்கும் விடுதிகள்

நெடுஞ்சாலையோர கடைகள்

ரேஷன் கடைகள்

மருந்தகங்கள்

மளிகைக்கடைகள் ஆகியவை வழக்கம் போல செயல்படும்

உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஆன்லைனில் பெறலாம்

இறுதிச் சடங்குகள் நடத்த அனுமதி (20 பேர் பங்கேற்கலாம்)

எவையெல்லாம் செயல்படாது ❌

வழிபாட்டு தலங்கள்

அனைத்து கல்வி நிறுவனங்கள்

பயிற்சி நிலையங்கள்

விமானங்கள்

ரயில்கள்

சாலை போக்குவரத்து

சமூகம் சார்ந்த விழா

அரசியல் விழாக்கள்

கேளிக்கை நிகழ்ச்சிகள்

விளையாட்டுகள்

கலாச்சாரம் மதவிழாக்கள்

ஆகியவை நடத்த தடை

மேற்குறிப்பிட்டவற்றில் இருந்தது மக்களுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும் என்பதை உணரலாம். இருந்தாலும் மக்களே அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில வந்தால் போதும். 
 

click me!