தீபம் ஏற்ற சிறந்த திசை மற்றும் எண்ணெய் எது தெரியுமா?

 
Published : Nov 05, 2017, 05:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
தீபம் ஏற்ற சிறந்த திசை மற்றும் எண்ணெய் எது தெரியுமா?

சுருக்கம்

which is the best oil for lightning and in which direction

தீபம் ஏற்ற சிறந்த திசை மற்றும் எண்ணெய் எது தெரியுமா?

தீபம் எற்றுவதே தனி அழகு தான்.... நம் வீட்டில் பூஜை  அறையில் விலகு ஏற்றும் போது, அதிலிருந்து  வரும் அந்த ஒளியால் பிரகாசமாக  தெரியும் அல்லவா...

அந்த பிரகாசம் தான்...நம் வாழ்க்கையிலும் வீச தொடங்கும்.அதற்கு எந்தெந்த எண்ணெய்யை பயன்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் எந்த திசையை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்....

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.

விளக்கேற்றும் திசைகள் :

கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி.

மேற்கு - கடன், தோஷம் நீங்கும்

வடக்கு - திருமணத்தடை அகலும்.

 தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்).

எண்ணெயின் பலன்கள் :

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொருத்து பலன் கிடைக்கும்.

நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்.

நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்.

இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி கிடைக்கும்.

ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய், 

தேங்காய் எண்ணெய்) - அம்மன் அருள் கிடைக்கும்.

வேப்பெண்ணெய் - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவிபெறவும்.

ஆமணக்கு எண்ணெய் - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது.

கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளை கொண்டு விளக்கேற்றக்கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையும் பெருக்க வல்லவை இந்த எண்ணெயின் தீபங்கள். 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்