கொரோனா 3வது அலை எப்போது தாக்கும்..? எய்ம்ஸ் மருத்துவர் அதிர்ச்சி தகவல்..!

Published : Jun 19, 2021, 06:09 PM IST
கொரோனா 3வது அலை எப்போது தாக்கும்..? எய்ம்ஸ் மருத்துவர் அதிர்ச்சி தகவல்..!

சுருக்கம்

கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் நாட்டை தாக்கும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கோவிட் நடைமுறைகளை பின்பற்றுவது குறைய தொடங்கி உள்ளது. 

கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 2.98 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3.85 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7.6 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா முதல் அலையில் பாதிப்புதான் அதிகமாக இருந்தது. ஆனால் 2-வது அலையில் உயிரிழப்பு அதிக அளவில் காணப்பட்டது. 2-வது அலை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை குறித்து மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை 6 முதல் 8 வாரத்தில் தாக்கும் என்று எய்ம்ஸ் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘’கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் நாட்டை தாக்கும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கோவிட் நடைமுறைகளை பின்பற்றுவது குறைய தொடங்கி உள்ளது. முதல் மற்றும் 2-வது அலைக்கு இடையில் என்ன நடந்தது என்பதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.

மக்கள் கூட்டங்கள் உருவாகின்றன. மக்கள் அதிக அளவில் திரள்கிறார்கள். இதனால்தான் தேசிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சில சமயங்களில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் கொரோனாவின் 3-வது அலை ஏற்படும். இது சில காலத்துக்கு இருக்கலாம்.கூட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுவதை பொறுத்து எல்லாம் இருக்கிறது’ என அவர் கூறியுள்ளார். கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் எல்லாவிதமான முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளன.


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Kidney Damage Symptoms : கிட்னி டேமேஜ் உணர்த்தும் 'காலை' அறிகுறிகள் இதுல 'அலட்சியம்' காட்டாதீங்க!
Cooking Tips : சப்பாத்தி மாவு பிசையுறப்ப இந்த '1' பொருள் சேர்த்தால் 'சுவை' அட்டகாசமா இருக்கும்! ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது