அதிர்ஷ்டவசமாக தனது கையை காப்பாற்றிய இளம் பெண்ணின் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் வைரலாக பரவியது.
சமூக ஊடகங்களில் அவ்வப்போது பலவகையான வீடியோக்கள் பரவி வருகின்றன. இந்த வீடியோக்களில் பலரின் விசித்திரமான செயல்கள் பெரும்பாலும் சோகத்தில் முடிகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக தனது கையை காப்பாற்றிய இளம் பெண்ணின் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை எனேசேட்டர் என்ற ட்விட்டர் பயனர் பகிர்ந்துள்ளார். ஆற்றில் படகில் செல்லும் இளம்பெண் ஒருவர் hot dog என்று அறியப்படும் பிரபல உணவை மீனுக்கு உணவாக வழங்குகிறார். கேமராவில் 'இதைக் பாருங்கள்' என்று கூறும் அப்பெண், பின்னர். இளம் பெண் அந்த உணவை தண்ணீருக்குள் காட்டுகிறார்.
சில நொடிகளில், தண்ணீரிலிருந்து ஒரு ராட்சத மீன் வெளியே வந்து, அவர் கொடுத்த உணவுடன் இளம் பெண்ணின் கையையும், சேர்த்து பிடிக்கிறது. அந்த பெண்ணின் முழங்கை அளவு மீனின் வாயில் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த ஸ்லோ-மோஷன் காட்சிகள் முடிவதற்குள், அப்பெண் ஒருவழியாக தனது கையை மீனின் வாயில் இருந்து வெளியே எடுக்கிறார். மீன் தன் இரையுடன் நீருக்கடியில் சென்று விடுகிறது.
இதனால் ஒரு நிமிடம் அதிர்ந்து போன அந்த இளம்பெண், தனது கையை காயமின்றி மீட்டதில் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டிருப்பதைக் காணலாம். இந்த வீடியோவை 29 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த காணொளிக்கு பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்த சம்பவம் புளோரிடாவில் நடந்துள்ளதாக யுஎஸ் டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
3,000 ஆண்டுகள் பழமையான அரிய பொருள் கண்டுபிடிப்பு.. வேற்றுகிரக உலோகத்தால் செய்யப்பட்டதாம்!