இனி கவலை வேண்டாம்... வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை டெலிட் பண்ணலாம்! வரப்போகுது புது அப்டேட்...

Asianet News Tamil  
Published : Oct 30, 2017, 09:12 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
இனி கவலை வேண்டாம்...   வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை டெலிட் பண்ணலாம்! வரப்போகுது புது அப்டேட்...

சுருக்கம்

WhatsApp Reportedly Letting Users Delete Sent Messages

தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்தடுத்த அப்டேட்ஸை நோக்கி செல்கிறோம், சோறு தண்ணி இல்லாய் என்றாலும் பரவாயில்லை இன்டர்நெட் இருந்தாலே போதும் என்கிற அளவிற்கு சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே போகிறது.

குறுந்தகவல்களை பகிர்வதற்கு மெசஞ்சர், ட்விட்டர், பேஸ்புக், டெலக்ராம், வாட்ஸ் ஆப் போன்ற மொபைல் வழி ஆப்ஸ்கள் நம்மை ஆக்கிரமித்துள்ளது. இந்த ஆப்ஸ் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பை அடுத்தடுத்த லெவலுக்கு தங்களை அப்டேட் செய்து கொள்ள போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வருகிறது.

மெசேஜ் அனுப்ப பயன்படும் வாட்ஸ்அப்பில் அடுத்த கட்டமாக ஒரு அப்டேட் வந்துள்ளது. ஏற்கனவே நாம் அனுப்பிய குறுந்தகவல்கள் சென்ட் ஆகிவிட்டால் அதை டெலிட் செய்ய முடியாது. சிலநேரம் நாம் தவறுதலான குறுந்தகவல்களை, ஒரு தனி நபருக்கோ அல்லது குரூப்பிலோ தவறுதலாகவோ, அனுப்ப கூடாத ஒன்றையோ ஃபார்வர்ட் செய்துவிட்டு, பின்பு வருத்தப்படுவதுண்டு. இந்தப் பிரச்னைக்குத் தற்போது தீர்வு கிடைக்கவுள்ளது.

அதாவது நாம் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் அம்சம் சீக்கிரமாகவே வாட்ஸ்அப்பில் அப்டேட் ஆகவுள்ளது. WaBetaInfo தளத்தின் வழியாக ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அம்சத்தைப்பற்றிய நன்மைகள், பயன்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பற்றி இப்போது பார்க்கலாம்:

* அனுப்புநர் மற்றும் பெறுநர் ஆகிய இருவருக்குமே இந்த அப்டேட் கிடைத்த பின்னர்தான் இந்த அம்சம் செயலாக்கம் பெறும். இதன்மூலம் GIF, டெக்ஸ்ட் மெசேஜ்கள், படங்கள், வாய்ஸ் நோட், லொகேஷன், ஸ்டேட்டஸ் ரிப்ளை போன்ற அனைத்து வகையான மெசேஜ்களையும் திரும்பப் பெறலாம்.

* வாட்ஸ்அப் ஆனது உங்கள் குறுந்தகவலின் நகல் ஒன்றைப் பெறுநருக்கு அனுப்பும். பெறுநர் ஒரு போலியான நகலைப் பெறுவார். ஆனால் அது சார்ந்த எந்த விதமான நோட்டிபிக்கேஷனையும் அவர் பெறமாட்டார், குறிப்பாக அந்தச் செய்தி அவரின் சாட் ஹிஸ்ட்ரியில் சேமிக்கப்படாது. செய்தியை அனுப்பிய ஏழு நிமிடங்களுக்குள் அதனை ரீகால் செய்து அதாவது அழித்துவிட வேண்டும்.

* பழைய வாட்ஸ்அப் பதிப்பைக் கொண்டவர்களுக்கும் இந்த அம்சம் வேலை செய்யும். ஆனால், நிச்சயமாக இந்த அம்சம் சிம்பியன் இயங்குதளத்தில் வேலை செய்யாது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்
Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!