
நல்லதும் கெட்டதும் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது தான் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அதில் நம் மனத்தை கலங்க வைக்கும் ஒரு நிகழ்வை பற்றி பாப்போம் .
ஒரு நொடி பொழுதில் அனைத்தும், நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் தொழில்நுட்பம் இப்போது உருவாகி உள்ளது . அதில் ஒன்று வாட்ஸ்ஆப். இதை பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது . வாட்ஸ் ஆப் தெரியாதவர்களும் இந்த உலகில் இருக்க முடியாது என்பதற்கு ஏற்ப இன்று அனைவரும் பயன்படுத்துகிறோம். இது நல்ல செய்தி தான்.
ஆனால் வாட்ஸ் ஆப்போ, பேஸ்புக்கோ எதை பயன்படுத்தினாலும் அதை எப்படி பயன்படுத்து கிறோம்NEW, எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது குறித்த சரியான புரிதல் நமக்கு இருக்க வேண்டும் . இல்லையெனில் பாதள கிணற்றில் விழுவதற்கு சமம் நம் வாழ்க்கை என்பதை ஒரு நிகழ்வு புரிய வைக்கும் .
உத்திர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள சாலிமார் கார்டனில் தங்கியிருந்த தாரா என்கிற பெண்மணி , பாலியல் தொழில் செய்வதற்காக வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி அதில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக, வாடிக்கையாளர்களை சேர்த்து வந்துள்ளார்
அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,பாலியல் தரகர் தாரா பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது .
பாலியல் தொழில் செய்வதற்காக, 3 வாட்ஸ் குரூப் வாட்ஸ்ஆப் குரூப் உருவாக்கி , அதில் தலா 60 முதல் 100 வரையிலான வாடிக்கையாளர்களை இணைத்துள்ளார்.
பின்னர் இவர்களுக்கு தேவையான பெண்களையும் அதில் சேர்த்து, பழக செய்வது பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது என பல குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் தாரா.
நாம் நினைத்து கொண்டிருப்போம் வாட்ஸ் ஆப் தானே ..... பசங்க ஏதோ சாட் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என , ஆனால் அவர்கள் எந்த குரூப்பில் உள்ளார்கள் , எந்த மாதிரியான உரையாடல்கள் நடத்துக்கிறார்கள் ...? வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்து நமக்கு தெரியாதவர்கள் கூட நம் மொபைல் எண்ணை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்வது என அனைத்தும் நடக்கிறது .
எனவே பெற்றோர்கள் கவனத்திற்கு..... எப்பொழுதும் நம் பிள்ளைகள் மீது அனைத்திலும் ஒரு கண் வைப்பது நல்லது .
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.