ஒவ்வொரு வருடமும் மாறுகிற பிறந்த நாள் கிழமையின் பொருள் என்ன ...?

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 02:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
ஒவ்வொரு வருடமும்   மாறுகிற  பிறந்த நாள்  கிழமையின்  பொருள் என்ன ...?

சுருக்கம்

பிறந்தநாள் கிழமை பலன் எப்படி  கணக்கிடப்ப்படுகிறது என்பதை  பார்க்கலாம்.

ஜென்ம   நட்சத்திரம் : 

ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்பது விதி.

அப்போது, நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில்,அந்த நட்சத்திரம் என்று வருகிறதோ,அந்தநாளை பிறந்த நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி கொண்டாடும் போது, ஒவ்வொரு ஆண்டும் கிழமைகள் மாறுபடும். உதாரணமாக, நீங்கள்

கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் என வைத்துக் கொள்வோம். அது இந்த ஆண்டு திங்கள்கிழமையாக இருக்கலாம். அடுத்த ஆண்டு வியாழன் என மாறலாம். இப்படியே, ஆண்டுதோறும் கிழமை மாறும். அவ்வாறு மாறுபடும்

கிழமைகளுக்கு ஏற்ப, அந்த ஆண்டிற்குரிய பலன்கள் அமையும் என்கிறது முகூர்த்த சிந்தாமணி என்ற நூல்.

ஞாயிறு         -        நீண்ட தூர பயணம்

திங்கள்          -       விருந்து சாப்பாடு கிடைத்தல்

செவ்வாய்    -       சுறுசுறுப்பு குறைதல்

புதன்               -  கல்வி அபிவிருத்தி

வியாழன்     -  நல்ல ஆடைகள் கிடைத்தல்

வெள்ளி         -  பெண்களின் ஆதரவு

சனி                  -      தைரியக்குறைவு

சனிக்கிழமை:

ஜென்மநட்சத்திரம் வந்தால், சனி ஜென்ம நட்சத்திர சாந்தி செய்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வரலாம் என  கூறப்படுகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Travel Apps: ட்ரிப் பிளான் பண்றது இனி ரொம்ப ஈஸி! இந்த 5 ஆப்ஸ் உங்க போன்ல இருக்கா?
Summer Drinks: வெயிலை சமாளிக்க 9 சூப்பர் ஹோம்மேட் பானங்கள்! உடம்புக்கும் நல்லது, தெம்பாவும் இருக்கலாம்!