மெரினாவில் குடியரசு தின ஒத்திகையாம்,....!! அப்படியென்றால் மெரினாவில் இளைஞர்களின் போராட்டம் ..?

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 11:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
மெரினாவில்  குடியரசு தின ஒத்திகையாம்,....!! அப்படியென்றால் மெரினாவில் இளைஞர்களின் போராட்டம் ..?

சுருக்கம்

நாளை குடியரசு தின ஒத்திகையாம் - ( மெரீனாவில்...! )- ஜனநாயகத்திற்கு எவ்வளவு மதிப்பு புரிகிறதா மக்களே .....!

வரும்  26 ஆம் தேதி,  குடியரசு தினம் என்பதால், ஒத்திகை  போராட்டம் நடைபெற  உள்ளது. இதனையொட்டி  நான்கு நாட்களுக்கு  மெரினா  கடற்கரை சாலையில்  பேருந்து போக்குவரத்து   மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின  ஒத்திகையை முன்னிட்டு நாளை 19  ஆம் தேதி  ஒத்திகை நிகழ்ச்சி   நடைபெற உள்ளது. இதனையொட்டி, வரும் 26  ஆம்  தேதி  காமராஜர் சாலையில்  உள்ள  காந்தி சிலை அருகே, நிகழ்ச்சி நடைபெறும் என்பது  குறிபிடத்தக்கது.

இதற்கு முன்னதாக  தற்போது, கடந்த  இரண்டு நாட்களாகவே , ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மெரினாவில்  மாபெரும்  போராட்டம்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஆங்காங்கு  கூட்டம்  கூட்டமாக  கூடி அமைதியான  முறையில் , ஜல்லிகட்டுக்காக  ஆதரவு  தெரிவித்து வரும் நிலையை உணர  முடிகிறது.

மெரீனா   கடற்கரை :

மெரினாவில்  ஜல்லிக்கட்டுக்கு  அதரவாக  தொடர்ந்து  இரண்டாவது நாளாக  போராட்டம்  நடத்தி வருகின்றனர்  இளைஞர்கள். இங்குதான்  நாளை  குடியரசு  தின  ஒத்திகை  நடைபெற  உள்ளது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு ...!

ஜனநாயக  நாட்டில் , நம்  மக்கள்  போராட்த்திற்கு பதில்  என்ன ? மக்களின்  உணர்சிகளுக்கும் , எண்ணங்களுக்கும்  முக்கியத்துவம்  கொடுக்காத   அவல நிலை  பார்க்கிறோம்.

ஜல்லிகட்டுகாக  போராடும்  இளைஞர்கள்  கூட்டம்  அதே  மெரினாவில்  போராடுகிறதே, மதிப்பு  கொடுக்க  வேண்டாமா ..?

குடியரசு  தின   விழா  ஒத்திகை ...!

மக்களின் எண்ணங்களுக்கும் , உணர்சிகளுக்கும் மதிப்பு கொடுக்காத  நிலையில், தொடர்ந்து போராடி  வரும் இளைஞர்கள் அதே  மெரினாவில்  ராப்பகலாக  துன்புற்று, குளீர்  என்றும் பாராமல் , வெயில் என்றும்  தோணாமல் , இன்னமும்  போராடி  வருகின்றனர். இந்நிலையில்  நாளை  அதே  மெரினாவில்  குடியரசு  தின  ஒத்திகை  நடைபெற போகிறது  என்பதுதான்  ஹைலைட்...

      

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!