ஜல்லிகட்டுக்காக குழந்தைகளும் பரிதவிப்பு....! திக்கு முக்காடும் அவலநிலை ...!

 
Published : Jan 18, 2017, 11:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
ஜல்லிகட்டுக்காக குழந்தைகளும் பரிதவிப்பு....! திக்கு முக்காடும் அவலநிலை ...!

சுருக்கம்

ஜல்லிகட்டுக்காக குழந்தைகளும் பரிதவிப்பு....! திக்கு முக்காடும் அவலநிலை ...!

ஜல்லிகட்டுக்காக  தமிழ் நாட்டில்  மாபெரும்   ஆதரவு  போராட்டம்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஆங்காங்கு  கூட்டம்  கூட்டமாக  கூடி அமைதியான  முறையில் , ஜல்லிகட்டுக்காக  ஆதரவு  தெரிவித்து வரும் நிலையை  பார்க்க முடிகிறது.

மெரீனா   கடற்கரை :

மெரினாவில்  ஜல்லிக்கட்டுக்கு  அதரவாக  தொடர்ந்து  இரண்டாவது நாளாக  போராட்டம்  நடத்தி வருகின்றனர்  இளைஞர்கள். 

மின்சாரம்  துண்டிக்கப்பட்டு, குறுக்கு  கணக்கு  போட்ட மேலிடத்திற்கு, நாமம்  போட்டு , தொடர்ந்து  முயற்சியோடு இரவு முழுக்க ,  விடிய விடிய  போராடி  வருகிறார்கள்  மக்கள்.  இரவு முழுக்க  வெளிச்சம் இல்லாததால்  தங்களிடம் உள்ள  மொபைல் போனில்  லைட் ஆன்  செய்து  போராடி  வந்தனர்.

கடுங்குளிர் என்று கூட பாராமல், ராப்பகலாக  போராடி வரும்  இளைஞர்கள் , உண்ண  உணவும் தண்ணீர்  கூட கிடைக்கப்பெறாமல் மிகவும்  தத்தளித்து கொண்டிருகிறார்கள்  என்பது  நிதர்சனமான  உண்மை

இந்த போராட்டத்தில்   இளைஞர்கள்  மட்டுமின்றி , ஏராளமான  பெண்கள்  மற்றும் குழந்தைகள்  கலந்துக்கொண்டுள்ளனர்.இரவு முழுக்க  போராட்டத்தில் , குளீர் காற்றில்  குழந்தைகளும் இருந்துள்ளதால்  பெரும்  சிரமத்திற்கு  ஆளாகியுள்ளது.

சிறுநீர் கழிக்க கூட  முடியாமல்    அவஸ்தையில்  மகளிர்  மற்றும்  குழந்தைகள்   படும்பாடு சொல்லி மாளாது.

அரை  உறக்கத்தில்  உள்ள  குழந்தையை தன்  தோல் மீது வைத்துக்கொண்டு, தன் ஆதரவை  வெளிப்படுத்திய  தந்தையை  கூட ,  தொலைக்காட்சிகளில்  பார்க்க முடிகிறது.

இவ்வளவு  சக்தி வாய்ந்த இந்த போராட்டத்திற்கு  நல்ல தீர்வு எட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்

   

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்