கிரிவலம் செல்லும் போது நாம் செய்யும் மாபெரும் தவறு என்ன தெரியுமா..?

First Published Mar 1, 2018, 12:58 PM IST
Highlights
what we should not do during girivalam


கிரிவலம் செல்லும் போது நாம் செய்யும் மாபெரும் தவறு என்ன தெரியுமா..?

கிரிவலம் என்றாலே நமக்கு மனதில் முதலில் வந்து நிற்பது திருவண்ணாமலை மற்றும் திருப்பரங்குன்றம்...

கிரிவலம் செல்ல கூடிய மிக முக்கிய இரண்டு இடங்கள்.....

கிரி- மலை

வலம் - மெதுவாக மலையை சுற்றி வருவது

திருவண்ணாமலை திருப்பரங்குன்றம்...

இந்த இரண்டு கோவில்கள் தான் மலையும் கோவிலும் ஒன்றாக கிரிவலம் வரக்கூடிய ஒரு சிறந்த இடமாக உள்ளது

30 ஆண்டுகளுக்கு முன்பாக....

30 ஆண்டுகளுக்கு முன்பாக,திருவண்ணாமலை சென்று கிரிவலம் செல்பவர்கள்  அனைவருமே ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள்..ஆனால் பின்னர் ஒரு சில முக்கிய நபர்கள்,சினி பிரபலங்கள் திருவண்ணாமலை சென்று கிரிவலம் சென்றதால்,மற்ற  மக்களுக்கும் விஷயம் தெரியவர சாதாரண மக்களும் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

பவுர்ணமி தினத்தன்று....

சந்திரன் என்றாலே வசீகரம் என்று அர்த்தம்....

உலகில் 84 லட்சம் உயிரினங்கள் இருக்கிறதாக வேதங்கள் கூறுகிறது.. இவைகளுக்கு உயிர்ப்பு ஆற்றல் கிடைக்கக் கூடிய நாள் தான் பவர்ணமி .....

இன்றைய தினத்தில்,தூங்காமல் இருந்தாலே,அகர்ஷன சக்தி ஏற்படும்...

கிரிவலம்  

மலையில் இருக்ககூடிய தாவரங்கள்,மூலிகைகள்,உயிர் ஆற்றல் உள்ள ஜீவ சமாதிகள்,சித்தர்களின் அகர்ஷன சக்திகள் மூலமாக நம்முள் நல்ல மாற்றத்தை கொடுக்கும்...

கிரிவலம் என்பது ஓடுவதற்கு அல்ல....

கிரிவலம் எப்படி வர வேண்டும் என்றால்..?

ஒரு ஒன்பது மாத கர்ப்பிணி பெண், கையில் விளக்கு வைத்து பொறுமையா எப்படி நடந்து வருகிறார்களோ....அப்படி  தான்  வர  வேண்டுமாம்.....

அதாவது,அமைதியாய்,ஆனந்தமாய்,எப்படி தன் வயிற்றில் உள்ள குழந்தையை  பத்திரமாக காப்பாற்ற வேண்டும் என நினைத்து,பய  பக்தியுடன்  நடந்து வருகிறாளோ.. அது போன்று நடந்து வர வேண்டுமாம்   

அவ்வாறு  நடக்கும் போது இறை சிந்தனையுடன் இறை நாமத்தை மனதில்  சொல்லிக்கொண்டே  நடக்க வேண்டும்...

இயற்கையால் ஆன ஒரு இனிப்பை வாங்கி,கிரிவல பாதையில் உள்ள புத்துக்கு அருகில் வைக்கும் பட்சத்தில் ஒரு ஆயிரம் உயிர் ( எறும்புகள் )அதனை  உண்டு வாழும்....

ஆண்களாக இருப்பின்,மேலாடை இல்லாமல் கிரிவலம் செல்வது நல்லது

மேலும் பட்டு  அல்லது கதர் ஆடையை  அணிந்து கிரிவலம் வந்தால், நல்ல ஆற்றலை  பெற முடியும்..

எதனை கண்டிபாக செய்ய கூடாது தெரியுமா..?

கூட வருபவர்களிடம் பேசுவது ...

தீனி சாப்பிட்டுக்கொண்டே சுற்றுவது..(கிரிவலம் வருவது)

முதலில் வாய் பேச்சு இருக்க கூடாது.....

மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்....

கிரிவலம் செல்லும் போது, வேகவாக நடந்தோ அல்லது ஓடவோ கூடாது....

அருணாச்சல புராணம் சொல்லும் ஒரு உதாரணம்

ரமண மகரிஷி ஒரு இடத்தில் சொல்லி இருப்பது....

ஒரு ராஜா குதிரையில்,காட்டுப்பூனையை துரத்தி இருக்கார்....அப்போது  காட்டுப்பூனையும் ஓடி ஓடி  இறந்துவிட்டதாம்....

குதிரையும் இறந்து விட்டது..ராஜாவும்  இறந்து விட்டாராம்

ஆனால்  குதிரை,காட்டுப்பூனை மோட்சம் அடைந்துவிட்டது. ஆனால் ராஜா மோட்சம்  அடையவில்லை...

காரணம்  

பூனை  ஒரே சிந்தனையில் ஓடியதாலும்,குதிரையும் ராஜா சொன்ன ஒரே வார்த்தைக்கு  ஒரு மனதை நினைத்து ஓடியதாலும் மோக்ஷம் அடைந்து விட்டது....

ஆனால் பல  சிந்தனையில்  காட்டுப்பபூனையை  விரட்டியதால்,ராஜா  கடைசியில் மோட்சம் அடையவில்லை என கூறப்படுகிறது.

இத்தகைய  சிறப்பு  வாய்ந்தது தான் கிரிவலம்..

click me!