
ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிக்கல்..!
ஏர்செல் சேவையில் மீண்டும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவன CEO சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்
கடந்த வாரம் முழுவதும் ஏர்செல் சேவை பெரும்பாலான இடங்களில் முடங்கியது. குறிப்பாக தமிழகத்தில்,கோவை, ஈரோடு,திருச்சி, காட்பாடி உள்ளிட்ட பல இடங்களில் சேவை பாதிக்கப் பட்டது
பின்னர்,ஏர்செல் சேவை முடக்கம் சரி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்தார்.
வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றுவதற்கு கூட முடியாத அளவுக்கு நெட்வொர்க் முற்றிலும் இல்லாமல் போனது.கோவை, சென்னை போன்ற இடங்களில் ஏர்செல் அலுவலகங்களை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஒப்பந்தம் செய்து கொண்ட டவர்களில் தங்கள் சிக்னல்களை நிறுத்திவிட்டதுதான் இதற்கு காரணம் என ஏர்செல் விளக்கம் அளித்திருந்தது.
பின்னர் ஒரு வழியாக டவர் கிடைத்தவுடன்,வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
இந்நிலையில்,வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்துக் கொள்ளுமாறு ஏர்செல் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
இதன் காரணமாக தற்போது ஏர்செல் சேவையை பயன்படுத்தி வருபவர்கள் உடனடியாக வேறு சேவைக்கு மாற ஏர்செல் நிறுவனமே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.