வாயுத்தொல்லையை நீக்க இதை சாப்பிடுங்க..!

First Published Feb 26, 2018, 2:05 PM IST
Highlights
to avoid gas problem we have to take this


வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்!

வாயுத்தொல்லை, அஜீரண பிரச்சனையால் அவதிப்படுவர்கள் பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று இஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்

தேவையான  பொருட்கள் : 
இளம் தளிரான கொழுந்துப் பிரண்டைத் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு, 
இஞ்சி - ஒரு சிறிய துண்டு, 
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, 
உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், 
காய்ந்த மிளகாய் - 2, 
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, 
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.

செய்முறை : 

பிரண்டையின் நாரை எடுத்து விட்டு பொடியாக நறுக்கவும். 

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும். 

அடுத்து உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும். 

முதலில் வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். 

அனைத்தும் சிறிது அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

இஞ்சி பிரண்டை துவையல் ரெடி.

குறிப்பு: பிரண்டை, இஞ்சி ஜீரண சக்தியைத் தரும். வாயுத்தொல்லை நீங்கும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் அசத்தல் சுவையில் இருக்கும். சுட்ட அப்பளம், வடகம் இதற்கு நல்ல காம்பினேஷன்.

click me!