தொப்பையை குறைக்க டயட் வேண்டாம்...! சிறந்த யோகா இதோ..3 மாதம் முழு பலன்..!

First Published Feb 24, 2018, 12:02 PM IST
Highlights
top reduce our belly we can do this yoga


யோகா என்பது உடல் நலத்திற்கும் மன அமைதிக்கும் எந்த அளவிற்கு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நாளுக்கு நாள் நமக்கு தெரிய வருகிறது...

அதனால் ஏற்படும் பலன்களை பல வெற்றியாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்..

சமீபத்தில் கூட,கோவையை சேர்ந்த நன்னம்மாள் என்ற பாட்டி யோகா தள்ளாடும்  வயதிலும் தளராமல் யோகா செய்து வலிமையாக உள்ளார்...

இதுவரை எந்த மருத்துவமனைக்கும் சென்றதில்லை என்றும்,அதே போன்று கண் கண்ணாடி கூட பயன்படுத்தாமல் நல்ல கண்பார்வை உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்...

சர்க்கரை ரத்த அழுத்தம் என பலரும் அவதிப்பட்டு வரும் இளைய தலைமுறையினர், யோகாவும் முக்கியத்துவத்தை அறிந்து அனைவரும் செய்து  பயன்படலாம்....

ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் பயிற்சிகளே உடல் எடையைக் குறைக்கப் போதுமானவை.ஒரே ஒருநாள் பயிற்சி செய்துவிட்டு,எடை மெஷினில் ஏறி நின்று எடை பார்ப்பது உதவாது. தினமும் தவறாமல் யோகா பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

கீழே குறிப்பிட்டிருக்கும் சில பயிற்சிகளைச் செய்தால் தொப்பை குறையும்; இடுப்பைச் சுற்றியிருக்கும் ஊளைச்சதைகள் குறையும்.யோகா பயிற்சிகளை ஏற்கெனவே தெரிந்துவைத்திருப்பவர்கள்,அவற்றை வீட்டிலேயே செய்யலாம்.ஆனால், புதிதாக கற்றுக்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று முறையாக யோகா செய்வதே சிறந்தது.

பாதஹஸ்தாசனம் :

நின்று கொண்டு செய்யும் பயிற்சி. நேராக நிமிர்ந்து நின்று, கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி, மூச்சை வெளியிட்டபடி முன்னோக்கி வளைய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்தால் அடிவயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு குறையும்.

ஜானுசிரசாசனம்  :

அமர்ந்த நிலையில் செய்யும் பயிற்சி. ஒரு காலை மடக்கி வைத்துக்கொண்டு, ஒரு காலை நீட்டி, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி முன்னோக்கி வளைய வேண்டும். வளைந்து படத்தில் காட்டியுள்ளதுபோல் ஒரு கையால் இன்னொரு கையைப் பற்றிக்கொள்ள வேண்டும். 30 விநாடிகள் இதே நிலையில் இருக்க வேண்டும். இதேபோல் இரண்டு பக்கமும் மூன்று முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி, தொப்பை குறைக்க உதவும்.

வனமுக்தாசனம் :

படுத்த நிலையில் செய்யும் பயிற்சி. படத்தில் காட்டியுள்ளதுபோல் இரண்டு கால்களையும் கோர்த்துப் பிடித்து இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் செய்ய வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும்.  

தனுராசனம் :

குப்புறப்படுத்து செய்யும் பயிற்சி. படத்தில் காட்டியுள்ளதுபோல் இரண்டு கால்களையும் மடித்து கைகளால் கோத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி வயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்தும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க மிக எளிமையாக செய்யக்கூடியது யோகா. 

இவற்றை எல்லாம் விட்டுவிட்டு,டயட்  என்கிற பெயரில் உடலை வருத்திக் கொண்டு , உடல் எடையும் குறையாமல் இருந்தால்,மன குழப்பம் தான் கடைசியில் மிஞ்சும்...

 சோ ..யோகா  செய்து பாருங்கள்.....

click me!