விஜய் மீது ரெய்டு பாய்ச்சல் ஏன்?: ஆளுங்கட்சி செய்த அக்கிரமத்துக்கு, தண்டனை அனுபவிக்கும் தளபதி!

Web Team   | Asianet News
Published : Feb 06, 2020, 07:06 PM ISTUpdated : Feb 06, 2020, 07:07 PM IST
விஜய் மீது ரெய்டு பாய்ச்சல் ஏன்?: ஆளுங்கட்சி செய்த அக்கிரமத்துக்கு, தண்டனை அனுபவிக்கும் தளபதி!

சுருக்கம்

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப் -4 மற்றும் குரூப் -2 தேர்வுகளில் மிக மோசமான முறைகேடுகள் நடந்துள்ளது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தமிழக அரசு ஊழியர்களான காவல்துறை மற்றும் வணிக வரித்துறையை சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் கைதாகி வருகின்றனர். 

விஜய் மீது ரெய்டு பாய்ச்சல் ஏன்?: ஆளுங்கட்சி செய்த அக்கிரமத்துக்கு, தண்டனை அனுபவிக்கும் தளபதி! 

விஜய் மீது வரிமான வரித்துறை ரெய்டு பாய்வதன் பின்னணியில் எப்போதுமே ஒரு அரசியல் பஞ்சாயத்தானது அசைபோடப்படும் பரபரப்பாக. குருவி படத்துக்குப் பின் அவர் மீது ரெய்டு பாய்வதற்கு தி.மு.க.வுடனான அவரது மோதல் காரணமாக கூறப்பட்டது. சில வருடங்களுக்கு முன்  அவர் மீது ரெய்டு பாய்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசுடன் அவருக்கு ஏற்பட்ட உரசலே காரணமாக கூறப்பட்டது. 

ஆனால் இப்போது மோடி அரசோடும் அவருக்கு எந்த பிரச்னையுமில்லை. பிகில் படத்தின் மூலம் அவர் பெற்ற வருமானத்தை மையப்படுத்திதான் இந்த ரெய்டு நடக்கிறது. ஆனால் பிகில் படத்தில் அவர் மத்தியரசுக்கு எதிராக எந்த பட்டாசையும் கொளுத்திப் போடவில்லை. அதேபோல் சர்கார் படத்தில் வம்பிழுத்தது போல் அ.தி.மு.க.வையும் இந்த முறை அவர் வம்புக்கு இழுக்கவில்லை. ஆனாலும் ஏன் ரெய்டு?இதுதான் கோடம்பாக்கத்தை குடைந்தெடுக்கும் கேள்வி. இதற்குப் பதில் சொல்லும் அரசியல் விமர்சகர்களோ....”தான் செய்த தவறுக்காக விஜய் இப்போது ரெய்டு பாய்ச்சலில் சிக்கவில்லை. ஆளும் அரசு செய்த தவறுக்காகத்தான் அவர் மீது ரெய்டு ஏவப்பட்டிருக்கிறது. 

ஆம், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப் -4 மற்றும் குரூப் -2 தேர்வுகளில் மிக மோசமான முறைகேடுகள் நடந்துள்ளது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தமிழக அரசு ஊழியர்களான காவல்துறை மற்றும் வணிக வரித்துறையை சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் கைதாகி வருகின்றனர். 

சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரிக்கும் இந்த வழக்கானது தமிழக அரசு மீதான நம்பகத்தன்மையையே அசைத்துக் கொண்டிருக்கிறது. மிக மிக மோசமான விமர்சனத்துக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சர் ஒருவரும் மிக கடுமையாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறார். 

ஏற்கனவே மக்கள் நல நடவடிக்கைகளில் அலட்சியமாக செயல்படுவதாக ஆளும் அ.தி.மு.க. அரசு மீது விமர்சனங்கள் உள்ள நிலையில், இந்த புகார் விவகாரமோ அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டபடி அரசுக்கு சிக்கலை உருவாக்கியிருக்கிறது. இதனால் தமிழக மக்கள், குறிப்பாக போட்டி தேர்வு எழுதி அரசுப் பணி வாங்கிடும் வெறியிலிருக்கும் இளைஞர்கள் மற்றும் முன் நடுத்தர வயது நபர்களின் வாக்குவங்கியோ மிக முழுமையாக அரசுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. இது எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல்களில் மிக கடுமையாக எதிரொலித்து, ஆளும் அரசின் வெற்றி வாய்ப்பை சிதைக்கும் என்பது தெளிவாகி இருக்கிறது. காரணம், இந்த மோசடி விவகாரத்துக்கு எதிராக தமிழக மக்களை குறிப்பாக இளைஞர் வாக்கு வங்கியை கூர் தீட்டிக் கொண்டே போகிறது தி.மு.க.

ஆக,  ஆளும் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய அரசியல் சறுக்கலில் இருந்து எஸ்கேப் ஆகவும், இளைஞர் வாக்கு வங்கியின் கவனத்தை இந்த விவகாரத்தில் இருந்து திசை திருப்பிடவுமே மாஸ் நடிகர் விஜய் மீது வருமான வரித்துறை பாய்ச்சல் ஏவப்பட்டிருக்கிறது! என்கிறார்கள். 

மற்ற எந்த மாஸ் நடிகரை விடவும் விஜய்க்கு இளம் ரசிகர்களின் ஆதரவு அமோகம். பல லட்சக்கணக்கான தமிழ் இளைஞர், இளைஞிகள் மற்றும் நடுத்தர வயதுடையோர் அவருக்கு வெறி ரசிகர்களாக உள்ளனர். இவர்கள்தான் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடை பார்த்து கொதிக்கும் நபர்கள். 

ஆக அப்படியே அந்த வாக்கு வங்கியின் கவனத்தை அல்வா போல் அலேக்காக திசை திருப்பிடவே விஜய் இப்படி பலிகடாவாக்க பட்டுள்ளார். நன்றாக கவனியுங்கள் புதன் பிற்பகலில் இருந்து தமிழக இளைஞர்கள் மற்று நடுத்தர மனிதர்களின் கவனம் விஜய் மீது திரும்பிடுச்சு. இதுவே பின்னணி!” என்கிறார்கள். 

உருப்பட்ருவோம்!

-    விஷ்ணுப்ரியா

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்