
"பட்ஜெட் 2020" - பிரதமர் சொன்னது என்ன..?
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார்.
அதில், மத்திய பட்ஜெட் தாக்கல் 2020 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வாரி வழங்கும் வகையில் உள்ளது என தெரிவித்தார்
குறிப்பாக உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்யப்படுவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் விமான நிலையங்கள் கட்டுவதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.
அதே போன்று மாவட்டம் முழுதும் ஏற்றுமதி முனையங்கள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் இளைஞர்கள் ஏற்றுமதி செய்வதில் பெரும் ஆவலாக முன்வருவார்கள். இதன் மூலம் சுயமாக வேலை வேலைப்பாய் உருவாக்கி கொள்ள முடியும் என்றும் தெரிவித்து உள்ளார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.