
இந்த நேரத்தில் மின்விசிறி காற்றும் கூட சூடாக இருப்பதால், ஏசிகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இருந்தாலும், சிலருக்கு ஒரு பழக்கம் இருக்கும், அதாவது ஏசியை மட்டும் ஆன் செய்தால் தங்கள் அறை குளிர்ச்சியடைய நேரம் ஆகும் ஆகவே ஏசியுடன் மின்விசிறியும் சேர்த்து போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இப்படி ஏசியை ஆன் செய்து உடனே ஃபேனைப் போட்டால் அந்த அறை உடனே குளிர்ந்துவிடும். அதன் பிறகு நம்மால் சுகமாக உறங்க முடியும். இப்போதெல்லாம் பலர் இந்த ஃபார்முலாவைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், ஏசி போட்டதும் ஃபேனை ஆன் செய்யலாமா? இரண்டையும் ஒரே நேரத்தில் வைத்தால் என்ன ஆகும்? இதுகுறித்து நிபுணர்கள் அளித்த பதிலைப் பார்ப்போம்.
சரியாக தூங்கலனா இந்த பிரச்சினைகள் வருமாம்..தடுக்க சில வழிகள் இதோ..!
ஏசி உபயோகிக்கும் போது சீலிங் ஃபேன் போடக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஏனெனில் சீலிங் ஃபேன் வெப்பக் காற்றை கீழே தள்ளுகிறது. ஆனால், ஏசியுடன் கூடிய சீலிங் ஃபேனைப் பயன்படுத்தினால், அது அறையில் காற்றைத் தள்ளும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம் அப்படி செய்வதால் முழு அறையையும் அது குளிர்விக்கிறது.
ஒரு சீலிங் ஃபேன் அறையின் ஒவ்வொரு மூலைக்கும் குளிர்ந்த காற்றை அனுப்புகிறது. அந்த நேரத்தில் ஏசி அதிகம் வேலை செய்ய வேண்டியதில்லை. இதற்கிடையில், அறையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடப்பட வேண்டும். இது அறையில் குளிர்ந்த காற்று வெளியேறுவதைத் தடுக்கிறது. உண்மையில், ஏசியுடன் கூடிய சீலிங் ஃபேனைப் பயன்படுத்தும்போது மின்சாரத்தை எளிதாகச் சேமிக்கலாம்.
மேலும் ஏசி வெப்பநிலை 24 முதல் 26 வரை இருக்க வேண்டும். மின்விசிறியை குறைந்தபட்ச வேகத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் அறை முழுவதும் விரைவில் குளிர்ச்சியடையும். அதே நேரத்தில், விசிறி அறை முழுவதும் காற்றை சுழற்றுகிறது, அறையை விரைவாக குளிர்விக்கிறது. இதனால் செலவு குறையும். ஆனால், 6 மணி நேரம் ஏசியை பயன்படுத்தும் போது 12 யூனிட்கள் செலவாகும். அதே நேரத்தில், ஏசியுடன் கூடிய மின்விசிறியைப் பயன்படுத்த 6 யூனிட்கள் மட்டுமே செலவாகும். இதனால் மின்சார செலவும் மிச்சமாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.