
ரிலையன்ஸ் குழும தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் சமீபத்தில் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. மார்ச் 1 முதல் 3 வரை நடந்த இந்த கோலாகல நிகழ்ச்சியில் இந்திய திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமாக நடந்த் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு பேசு பொருளாக மாறியது.
இந்த நிகழ்வு 10 நாட்களாகியும் இதுதொடர்பான புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது தனது ப்ரீ வெட்டிங் விழாவில் ராதிகா மெர்ச்சன்ட் பிரபல ஹாலிவுட் பட வசனத்தை காப்பி அடித்து பேசி உள்ளார். என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.. 2004-ம் ஆண்டு வெளியான Shall we dance என்ற படத்தில் இருந்து தான் ராதிகா தனது காப்பியடித்ததாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
முழுக்க முழுக்க வைரம், மரகதம்.. இஷா அம்பானி அணிந்திருந்த விலை உயர்ந்த ட்ரஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
சாதிக் சலீம் என்ற பயனர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ராதிகாவின் பேச்சு மற்றும் அந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சியை சேர்த்து வீடியோவை பகிர்ந்துள்ளார், "அவர்கள் என்னை அழைத்திருக்கலாம், நான் அவர்களுக்கான வார்த்தைகளை சில கோடி ரூபாய் செலவில் மாற்றியிருப்பேன். ." என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ அந்த நடிகை பேசும் அதே வசனங்களை ராதிகா மெர்ச்சண்ட் பேசுவதை பார்க்க முடிகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் ராதிகாவுக்கு ஆதரவாகவும், சிலர் அவருக்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகின்ற்னர். ராதிகாவுக்கு அந்த வசனம் மிகவும் பிடித்திருக்கலாம் அதை பேசியதில் என்ன தவறு என்று பதிவிட்டுள்ளனர். ஆனால் சிலரோ ராதிகாவின் பேச்சை கேலி செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
மகளுக்கு வாரி வழங்கும் அம்பானி! ஈஷா அம்பானியின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கடந்த 2023-ம் ஆண்டு ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. . ஆனந்த்-ராதிகாவின் ப்ரீ வெட்டிங் விழாவில் இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தா, ஆனந்த் பிரமல் உள்ளிட்ட பலரும் திருமணத்தில் கலந்து கொண்டனர். மேலும் ஆனந்த் - ராதிகாவுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.