நச்சுன்னு 19 பாயிண்ட்ஸ்..! ஏப்ரல் 20 -க்கு பிறகு யாரெல்லாம் வேலையை தொடங்க முடியும் தெரியுமா?

By ezhil mozhiFirst Published Apr 15, 2020, 8:20 PM IST
Highlights
ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு, எவையெல்லாம் இயங்கும்? யாரெல்லாம் வேலைக்கு செல்ல முடியும்? யாரெல்லாம் அவரவர் தொழிலில் ஈடுபட முடியும் என்பதை பார்க்கலாம். 
நச்சுன்னு 19 பாயிண்ட்ஸ்..! ஏப்ரல் 20 -க்கு பிறகு யாரெல்லாம் வேலையை தொடங்க முடியும் தெரியுமா? 

இன்றுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மத்திய அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன் படி ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது. 

அதன் படி ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு, எவையெல்லாம் இயங்கும்? யாரெல்லாம் வேலைக்கு செல்ல முடியும்? யாரெல்லாம் அவரவர் தொழிலில் ஈடுபட முடியும் என்பதை பார்க்கலாம். 


ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை❗

1. அனைத்து வேளாண் நடவடிக்கைகள் செயல்படலாம்.

2. மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம்.

3. 50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்.

4. பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்.

5. வங்கிகள் வழக்கமான நேரங்களில் சேவைகளை வழங்கலாம்.

6. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைனில் பாடம் நடத்தலாம்.

7. நூறு நாள் வேலைத்திட்டங்களில் சமூக இடைவெளியுடன் பணிகளை தொடரலாம்.

8. தபால் நிலையங்கள், பெட்ரோல்பங்க்குகள் உள்ளிட்டவை இயங்கும்.


9. சாலை, ரயில், விமானங்கள் மூலம் அனைத்து சரக்கு போக்குவரத்தும் செயல்படும்.

10. அனைத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள், லேப் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இயங்க அனுமதி.

11. ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படலாம்.

12. ஐடி சேவைகள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்.

13. கிராம அளவிலான இ சேவை மையங்கள் இயங்க அனுமதி.

14. கூரியர் சேவைகளுக்கு அனுமதி.

15. ப்ளம்பர், எலெக்ட்ரிசியன், மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோருக்கு அனுமதி.

16. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி. பணியாளர்களை அழைத்து வர நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

17. கிராமப்புறங்களில் செங்கல் சூளைகளுக்கு அனுமதி.

18. கட்டுமானத் தொழிலாளர்கள் பணி நடைபெறும் இடத்தில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதி.


19. 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்.

வரும் நாட்களில், கொரோனா கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில் மற்ற சேவைகளும், அலுவலகங்களும் மெல்ல மெல்ல முழு வீச்சுடன் இயங்க அனுமதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதே வேளையில் பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகிறது   
click me!