கொரோனாவில் இருந்து காப்பாற்றும் "ஆரோக்கிய சேது செயலி"..! எப்படி சாத்தியப்படுகிறது?

By ezhil mozhiFirst Published Apr 15, 2020, 7:49 PM IST
Highlights
அரசு மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து உருவாக்கிய இந்த புதிய செயலி கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை டிராக் செய்ய முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்கிய சேது செயலி வெளியான நாள் முதல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் படி இந்த செயலி வெளியான 13 நாட்களில் 5 கோடி பேருக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து உள்ளனர்

அரசு மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து உருவாக்கிய இந்த புதிய செயலி கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை டிராக் செய்ய முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது. ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ் வசதி மூலம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் யாரேனும் தொடர்பில் இருந்தாரா என்பதை  உறுதி செய்ய முடியும்.



கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு பெரும் நடவடிக்கை எடுத்து எடுத்து வரும் நிலையில், இந்த  செயலி பேருதவியாக இருப்பதால் இந்தியாவின் இந்த முயற்சியை பார்த்து உலக வங்கி பாராட்டு தெரிவித்து  உள்ளது.

இந்தியா இந்த செயலி வெளியிட்ட பிறகே, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மொபைல் போனில் பயன்படுத்தும் வகையில், கொரோனா தொடர்புகளை தடமறியும் புதிய ஆப்ஸ் உருவாக்குவதில் ஈடுபட்டு  வருவதாக தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் இந்த முயற்சிக்கு நிதி ஆயோக் சிஇஓ அமிதாப்காந்த் பாராட்டு தெரிவித்திருந்தார்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த செயலியை முன்னுதாரணமாக காட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் கையாளலாம் என உலக வாங்கியே தெரிவித்து உள்ளது.

உலக நாடுகளை பெருமளவு அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவில் தற்போது வரை கட்டுக்குள் தான்  உள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கையும் மத்திய மாநில அரசுகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
click me!