
கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு என பாடல் வரிகள் கூட கேள்வி பட்டிருப்போம். அந்த அளவுக்கு பொதுவாகவே அனைவருக்கும் பிடித்த ஒரு கலர் என்றால் அது கருப்பு என்பதில் எந்த மாற்றமும் இருக்காது . அதே சமயத்தில் எதை வாங்கினாலும் கருப்பு, எதை பார்த்தாலும் கருப்பு என அனைத்தையும் தேர்ந்தெடுக்க முடியாது .
அப்படிஎன்றால், எதையெல்லாம் கருப்பு நிறத்தில் வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்பதை பார்க்கலாம் . குறிப்பாக பெண்கள் வைத்துக்கொள்ள வேண்டிய கருப்பு நிற பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.
கருப்பு நிற ஆடை முதன்மை இடத்தை பெரும். நம் நிறத்திற்கு ஏற்றார் போல் கருப்பு நிறம் பொருத்தமாக இருக்குமா என்பதை பார்த்து வாங்கி கொள்ளலாம்
ப்ளாக் ஹீல்ஸ் செருப்பு
மற்ற நிற ஆடைகளை அணிந்து , அதன் மீது ஒரு ஓவர் கோட் போட்டுக்கொள்வது மேலும் பெண்களுக்கு அழகு சேர்ப்பதாக இருக்கும்
ப்ளாக் ஜீன்ஸ் அணிந்தால் அழகுடன் தெரிவது மட்டுமின்றி, கூடுதலாக நம் எளிமையாய் காண்பிக்கும்
பிக்கினி ஆடைகள் அணிவதை விரும்பும் பெண்கள் , கறுப்பு நிற பிக்கினி ஆடையை தேர்வு செய்யலாம்
கருப்பு நிற ஹேன்ட்பேக் மிக அழகாக இருக்கும் அதே சமயத்தில் ரிச் லுக் தெரியும்
கருப்பு நிற ஸ்கர்ட் மிகவும் கவர்ச்சியாகவும் , அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும்
கழுத்தில் கருப்பு நிற பட்டையை அணிவதால் வேறு எந்த அதிக விலை உயர்ந்த அணிகலன்களும் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படாது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.