கூகுளில் சில விஷயங்களைத் தேடுவது சட்டவிரோதமானது மற்றும் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும். அவை எந்தெந்த விஷயங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
அரசாங்க வழிகாட்டுதல்களின்படி கூகுளில் சில விஷயங்களைத் தேடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி தேடினால் சிறைக்கு செல்வது உறுதி. அத்தகைய ஐந்து விஷயங்கள் என்ன? என்பதை பார்ப்போம்.
போதைப்பொருள் தயாரிப்பு:
போதைப்பொருள் தயாரிப்பு அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை கூகுளில் தேடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆபாசப் படங்கள்:
கூகுளில் ஆபாசப் படங்கள், குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் போன்றவற்றைத் தேட வேண்டாம். குழந்தைகள் ஆபாசப் படத்தைப் பார்ப்பது, தயாரிப்பது மற்றும் வைத்திருப்பதுகூட போக்சோ சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
வெடிகுண்டு:
வெடிகுண்டு தயாரிக்கும் முறை பற்றி தேடினாலும் டேஞ்சர்தான். பாதுகாப்பு நிறுவனங்கள் இன்டர்நெட் பயன்பாட்டில் இதுபோன்ற தேடல்களைக் கண்காணித்து வரும். அவர்களிடம் சிக்கினால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும். எனவே தவறியும் வெடிகுண்டு தொழில்நுட்பம் பற்றித் தேட வேண்டாம்.
கருக்கலைப்பு:
மருத்துவரின் முறையான அனுமதி இல்லாமல் கருக்கலைப்பு செய்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே கருக்கலைப்பு செய்வது எப்படி தேடுவதும் சட்டவிரோதமானது. எனவே, இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் புகைப்படம்:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் உண்மையான பெயர், முகவரி, புகைப்படம் ஆகியவற்றை பொதுவெளியில் வெளியிடக் கூடாது. அதேபோல பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பற்றிய தகவல்களையும் வெளியிடக் கூடாது.