“ சனியனே “ என்ற வார்த்தையை  நீங்கள்  அடிக்கடி பயன்படுத்துரீங்களா...?

First Published Dec 28, 2016, 3:00 PM IST
Highlights


“ சனியனே “ என்ற வார்த்தையை  நீங்கள்  அடிக்கடி பயன்படுத்துரீங்களா...?

சனியே என திட்டினால் யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி, சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம்

சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்கிறார்களாம்.

வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால், ஏன் மந்தமாக இருக்கிறாய் ? என கேட்பதுண்டு. மந்தகதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம்.

ஆனால் சனியே என திட்டக்கூடாது. இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி, சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம். மந்தகதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி திருத்துபவர்களுக்கு, சனீஸ்வரனின் அருள் கிடைக்குமாம்.

மேற்சொன்ன  அனைத்தும் ஐதீகம் என  சொல்லப்படுகிறது. இதனால்  தான் என்னமோ , நாம் கோபத்தில் , இது போன்ற வார்த்தையை பயன்படுத்தினால் ,  நம்  முன்னோர்கள்  நம் நாவடக்க  சொல்வார்கள்.

click me!