அசைவம் சாப்பிட்ட பிறகு மறந்து கூட கோவிலுக்குள் செல்லாதீங்க..! இப்படி ஒரு கெடுதல் உங்களுக்கு தான்...!

By ezhil mozhiFirst Published Apr 18, 2019, 6:56 PM IST
Highlights

அசைவம் சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது என்று சொல்வதை கேட்டிருப்போம். அதன்படியே நடந்தும் வருகிறோம்.

அசைவம் சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது என்று சொல்வதை கேட்டிருப்போம். அதன்படியே நடந்தும் வருகிறோம்.

ஆனால் அதற்கு என்ன காரணம் என்று இதுவரைக்கும் யாருக்காவது தெரியுமா? நாம் உண்ணும் உணவுக்கும் நம் மனதிற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. உதாரணமாக அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும். காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம் அல்லவா?

பொதுவாக அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்த நிலையை ஏற்படுத்தும்.  பொதுவாக கோவிலுக்கு செல்லும் போது சுத்தமாக செல்ல வேண்டும். இங்கு சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை. மனதையும் சேர்த்து தான் குறிக்கிறது.

மனதளவில் மந்த நிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோவிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழக்க நேரிடும். பொதுவாகவே அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலை குறைக்கும் தன்மை படைத்தவை என்பது குறிப்பிட தக்கது.

கோயிலுக்கு செல்லும்போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்க செல்ல வேண்டும் என நம் முன்னோர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை அசைவ உணவை சாப்பிட்ட பின்னர் கோவிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் சாப்பிட மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வது சிறந்தது.

click me!