
குழந்தைகளுக்கு டீ காப்பி கொடுக்கிறீர்களா....? உஷார்..!
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே டீ காப்பி கொடுப்பவர்களா நீங்கள்..?
4 வயது வரை தவிர்ப்பது நல்லது.
டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக,குழந்தைகளுக்கு பசி எடுப்பது குறைந்து விடும். இது தெரியாமல் பெற்றோர்கள்,குழந்தை சரியாக சாப்பிட மாட்டேன்றது என புலம்புவதை பார்க்க முடியும்.
மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், 4 வயது வரை கட்டாயம் டீ குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
டீயில் உள்ள 2 சதவீதகேபின்
கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது.எனவே இந்த பழக்கத்தை விட்டால் தலைவலி,சோர்வு, நடுக்கம் முதலியன ஏற்படலாம்.
டீ - அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது
சிறுநீரகங்களுக்கு வேலைப்பளுவை அளிக்கிறது.
சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போகும்.
டீ நேரடியாகவும்,மறைமுகமாகவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது.
இதே போன்று காபியில் கூட உள்ளது. எனவே டீ காப்பி குடிக்கும் பழக்கம் உள்ள பெரியவர்களே இத்தனை சிக்கலை சந்திக்கும் பொது, உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும் தருணத்தில்,குழந்தைகளுக்கு டீ காப்பி கொடுப்பது ஒரு விதத்தில் சிறிய அளவிலான விஷம் கொடுப்பதை போன்றது என்றே கூறலாம்.
எனவே பெற்றோர்களே நான்கு வயது வரை கட்டாயம் குழந்தைகளுக்கு டீ காப்பி கொடுக்காதீங்க...
நான்கு வயதை கடைந்த உடன் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காலையோ அல்லது மாலையோ கொஞ்சமாவாக டீ அல்லது காபி எடுத்துகொள்ளலாமே தவிர,பழக்கமாக வைத்துக்கொள்ள கூடாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.