
ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்ணை கரம் பிடித்த உண்மை காதலன்..!
உயிரோட்டமனது காதலர் தினம்..!
ஓடிசாவில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரமோதினி என்ற 17 வயது இளம் பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசினர்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்,ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையானார்.அப்போது,தன்னை கவனித்து வந்த செவிலியர் மூலம் சாகு என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
'ஸ்டாப் அசிட் அட்டாக்' திட்டத்தின் உறுப்பினர்களால் நடத்தப்படும் காபி பாரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இருவரும் அடுத்த ஆண்டு இதே நாளில் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு ஒடிசாவில் காபி பார் வைத்து ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவது தான் எதிர்கால திட்டம் என இருவரும் தெரிவித்து உள்ளனர்.
காதலர் தினத்தன்று பலரும் பீச் பார்க் என சுற்றி என்ஜாய் செய்து வரும் இந்த தருணத்தில் தன்னுடைய உண்மை காதலை வெளிப்படுத்தி,ஆசிட் வீச்சிக்கு ஆளான பெண்ணிற்கு வாழ்க்கை கொடுத்துள்ளார் சாகு .
இவருடைய இந்த செயலை பாராட்டி அனைவரும் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.