ஒருவர் இறக்கும் தருவாயிலும் செய்யக்கூடாத முக்கிய விஷயம் இதோ..! முன்னோர்கள் சொன்ன அரிய தகவல்!

Published : Jan 11, 2019, 04:05 PM IST
ஒருவர் இறக்கும் தருவாயிலும் செய்யக்கூடாத முக்கிய விஷயம் இதோ..! முன்னோர்கள் சொன்ன அரிய தகவல்!

சுருக்கம்

ஒருவனுக்கு உயிர் பிரியும் தருவாயில் அவனை கட்டிலில் படுக்க  வைக்க கூடாது. தரையில் தர்ப்பையை போட்டு அதன் மீது அவனை படுக்க வைக்க வேண்டும்.  

ஒருவர் இறக்கும் தருவாயிலும் செய்யக்கூடாத முக்கிய விஷயம் இதோ..! 

ஒருவனுக்கு உயிர் பிரியும் தருவாயில் அவனை கட்டிலில் படுக்க  வைக்க கூடாது. தரையில் தர்ப்பையை போட்டு அதன் மீது அவனை படுக்க வைக்க வேண்டும். கட்டிலில் படுத்துக்கொண்டு உயிர்விட்ட ராஜா நரகத்தை அடைந்தார் என்ற வரலாற்று சம்பவங்களும் உண்டு.ஒரு மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் பூமாதேவியின் மடியிலேயே நடக்க வேண்டும்.

தற்காலத்தில் வசதிக்காகவும்,எளிதாக பிரசவம் பார்ப்பதற்காக பெரும்பாலும் பிரசவம் விடுதிகளில் கட்டிலில்தான் பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இதுவே தவறான முறை என அன்றே கணித்துள்ளனர்  நம் முன்னோர்கள். இறக்கும் தருவாயில் உள்ள ஒருவனுக்கு கடைசி நேரத்தில் செய்ய வேண்டியவை இவை தானாம்

இறக்கப்போகும் மனிதனுக்கு துளசி, சாலிகிராமம் போன்ற பொருட்களை கண்ணில் காட்டவும்.ராம ராம என்ற மந்திரத்தை நாமத்தை அவரது வலது காதில் ஓத வேண்டும். புண்ணியசாலிகளுக்கு முகத்தில் உள்ள துவாரங்கள் மூலமாகவும், ஞானிகளுக்கு சிரசு வெடித்தும், பாவிகளுக்கு துவாரம் வழியாகவும் உயிர் பிரியும் என்று கூறுகிறது சாஸ்திரம்.

உயிர் பிரிந்த பின்பு தலையை தெற்கு புறமாக வைத்து படுக்க வேண்டும். பூணூலைப் இடது புறமாக போட்டுக்கொள்ள வேண்டும். பெண்கள் தலையை விரித்துக் கொண்டு தெற்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும். ஒருவன் இறந்த உடன் ஒரு மாயம் அதாவது மூன்று மணி நேரம் கழித்த பின்பு அந்த உடலை அப்புறப்படுத்த வேண்டும். இரவு ஒன்பது நாழிகைக்கு மேல் தவறு செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
இந்த '3' விஷயங்களை செய்தால் உடனே குளிங்க - சாணக்கியர்