2 ஆவது சிக்னலை அனுப்பிய வேற்றுகிரகவாசிகள் ..! தீவிர ஆலோசனையில் விஞ்ஞானிகள்..!

By thenmozhi gFirst Published Jan 11, 2019, 3:38 PM IST
Highlights

வேற்றுகிரகவாசிகளை இதுவரை நாம் படத்தில் மட்டுமே கண்டிருப்போம். ஆனால் நிஜத்திலும் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என கூறுகின்றனர் விஞ்ஞானிகள். 

2 ஆவது சிக்னலை அனுப்பிய வேற்றுகிரகவாசிகள் ..! தீவிர ஆலோசனையில் விஞ்ஞானிகள்..! 

வேற்றுகிரகவாசிகளை இதுவரை நாம் படத்தில் மட்டுமே கண்டிருப்போம். ஆனால் நிஜத்திலும் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என கூறுகின்றனர் விஞ்ஞானிகள். அதற்கேற்றவாறு தற்போது 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு இரண்டாவது முறையாக சிக்னலை அனுப்பி உள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற போன்ற நாடுகளில் நவீன ரேடியோ தொழில்நுட்ப தொலைநோக்கிக் கருவிகளை பொருத்தி இது போன்ற அசாதாரண சிக்னல் வருகிறதா என தொடர்ந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு கண்காணிக்கும் போது கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருவிதமான அசாதாரண சிக்னல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து ரேடியோ சிக்னல் இப்போது கிடைத்துள்ளது.

இந்த சிக்னலை ஆராய்ச்சி செய்து பார்த்த போது நட்சத்திரக் கூட்டத்தின் நடுவே இருந்து இந்த சிக்னல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அங்குதான் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னலை பூமியிலிருந்து வைத்து கணக்கிடும்போது மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் 150 கோடி ஆண்டுகள் பயணித்தால் எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அந்த அளவிற்கான தூரம் கொண்டதாக உள்ளது.

அங்கிருந்து கிடைக்கக்கூடிய, அதுவும் தொடர்ந்து பூமிக்கு இடைவெளி விட்டுவிட்டு கிடைக்கக்கூடிய இந்த சிக்னலை வைத்து பார்க்கும்போது வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து தான் இந்த சிக்னல் கிடைத்துள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது பல நாடுகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் மிக வலுவான காந்தப்புலம் உடைய வேகமாக சுழலக்கூடிய இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் போதும் இதுபோன்ற சிக்னல் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இருந்தபோதிலும் முதல் வாய்ப்பாக வேற்றுகிரகவாசிகள் இடமிருந்து தான் இந்த சிக்னல் கிடைத்துள்ளது என்று கணிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!