மொபைல் போனில் "பண பரிவர்த்தனை" செய்கிறீர்களா..? வந்துவிட்டது அடுத்த ஆபத்து..!

By thenmozhi gFirst Published Jan 11, 2019, 1:24 PM IST
Highlights

மொபைல் போனில் பண பரிவர்த்தனை செய்யும் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக இதனை கவனிக்க வேண்டும். இதில் உள்ள ஆபத்து குறித்து குற்றப்பிரிவு இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மொபைல் போனில் பண பரிவர்த்தனை செய்கிறீர்களா..? 

மொபைல் போனில் பண பரிவர்த்தனை செய்யும் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக இதனை கவனிக்க வேண்டும். இதில் உள்ள ஆபத்து குறித்து குற்றப்பிரிவு இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொழிநுட்பம் வளர வளர அனைத்தும் நொடிப்பொழுதில் நம்கையில் கிடைத்து விடுகிறது. இருந்தாலும், அதுவே சில சமயத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் உணர வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மத்திய  அரசு ஊக்குவிக்கிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால், அதற்காகவே சில செயலியை மத்திய அரசே ஏற்படுத்தியும் கொடுத்தது.

ஆனால் தற்போது பல தனியார் மையங்களால் உருவாக்கப்பட்டு உள்ள பல்வேறு செயலிகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துக்கொண்டு அதன் மூலம் பண பரிவர்த்தனை செய்கின்றனர். அவ்வாறு பதிவிறக்கம் செய்யும் போது, நம் வாங்கி கணக்கு முதல் பாஸ்வர்ட் வரை அனைத்தையும் அதில் சேகரிக்கப்படுகிறது. இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் பிரச்னை வரும் என்கிறார் அந்த உயர் அதிகாரி.

இன்னும் சுருக்கமாக  சொல்லப்போனால், ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது, அந்தந்த வங்கிக்கு உண்டான இணையதள பக்கத்தில் சென்று பரிவர்த்தனையில் ஈடுபடுவது நல்லது என்றும், அதை விட்டுவிட்டு மற்ற பல செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு, அதன் மூலம் பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கஷ்டப் பட்டு உழைத்து, சம்பாதிக்கும் பணத்தை நொடிப்பொழுதில் விட்டுவிடக் கூடாது அல்லாவா..?

இனியாவது பண பரிவர்த்தனையில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பான பரிவர்த்தனையில் ஈடுபடுவது நல்லது என்கிறார் சம்மந்தப்பட்ட அதிகாரி.

மேலும் நம் மொபைல் தொலைந்து விட்டால், அதனை மிக எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. உடனே நீங்கள் செய்யவேண்டியது ஒரு புகார் கொடுக்க வேண்டும். அல்லது மெயில் மூலமாக உங்கள் வங்கிக்கு தெரியப்படுத்தி, வேறு யாரும் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியாதபடி லாக் செய்து விடுவது நல்லது.

மொபைல் ஹாக்கர்ஸ் மூலம், எதனையும் வெளியில் எடுத்து விடலாம் என்பதை உணரந்து அதற்கேற்றவாறு பாதுகாப்பாக செயல்படுவது நல்லது.
 

click me!