வெங்காயம் விற்கிற விலையை விடுங்க..! வெங்காயத்துல இப்படி ஒரு விஷயம் இருக்கு தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Nov 20, 2019, 2:53 PM IST
Highlights

உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தாலே போதும் உடல் சூடு தணியும். யாருக்காவது மயக்கம் வந்தால் உடனடியாக வெங்காய சாற்றை சற்று பிழிந்து எடுத்து மயக்கம் அடைந்தவரின் மூக்கில் விட்டால் மயக்கம் தெளியும்.

வெங்காயம் விற்கிற விலையை விடுங்க..! வெங்காயத்துல இப்படி ஒரு விஷயம் இருக்கு தெரியுமா..? 

பெண்கள் வெங்காயத்தை பச்சையாக மென்று சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினை வரவே வராது. அதேபோன்று காய்ச்சல் இருப்பவர்கள் வெங்காயத்துடன் சற்று மிளகு சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குறைந்துவிடும்.

உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தாலே போதும் உடல் சூடு தணியும். யாருக்காவது மயக்கம் வந்தால் உடனடியாக வெங்காய சாற்றை சற்று பிழிந்து எடுத்து மயக்கம் அடைந்தவரின் மூக்கில் விட்டால் மயக்கம் தெளியும்.

அதேபோன்று காதில் ஏற்படும் சில பிரச்சனைகள்... அதாவது இரைச்சல், சீழ் வடிதல் போன்றவற்றிற்கு வெங்காய சாற்றை இரண்டு அல்லது மூன்று சொட்டுக்கள் காதில் விட்டு வர அவை மிக எளிதில் குணமாகும்.

அதேபோன்று மூல சூடு இருப்பவர்கள் பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகமும் கற்கண்டும் தேவையான அளவு சேர்த்து உண்டு வந்தால் சரியாகிவிடும். பொதுவாகவே உணவில் தினமும் வெங்காயத்தை சேர்த்து சமைத்து வந்தால் இதய நோய் வராமல் தவிர்க்கலாம்.

இது தவிர பல வகையான தோல் நோய்களுக்கும் வெங்காயம் பேருதவியாக இருக்கும். ரத்த சோகை இருப்பவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை மெல்ல மெல்ல குறையும். பச்சை வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பல் தொடர்பான நோய்களை அண்டவே அண்டாது. இதற்கெல்லாம் காரணம் வெங்காயத்தில் என்ன எல்லாம் சத்து உள்ளது என்பதை நீங்களே பாருங்கள்....

ஈரப்பதம் - 86.6% ,புரதம் - 1.2%, கொழுப்புச்சத்து - 0.1%, நார்ச்சத்து - 0.6%, தாதுச்சத்து - 0.4%, கார்போஹைட்ரேட்டுகள் - 11.7% அடங்கி  உள்ளது. இத்தனை நல்ல பண்புகளை கொண்டுள்ள  வெங்காயத்தை நாம் ஏன் தவிர்க்க வேண்டும். முடிந்த அளவிற்கு முறையாக பயன்படுத்தி  ஆரோக்கியமாக வாழலாமே....
 
click me!