ஜியோ அதிரடி அறிவிப்பு..! இனி இலவசமே கிடையாது... வாடிக்கையாளர்கள் அதிருப்தி..!

By ezhil mozhiFirst Published Nov 20, 2019, 1:52 PM IST
Highlights

சமீபத்தில் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தங்களது சேவைக்கான கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. 

ஜியோ அதிரடி அறிவிப்பு..! இனி இலவசமே கிடையாது...வாடிக்கையாளர்கள் அதிருப்தி..! 

ஜியோ வருகைக்கு பின்னர் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.... காரணம் இலவச டேட்டா, பிரீ கால்ஸ்... இதன் காரணமாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்ற சேவையிலிருந்து ஜியோ பக்கம் திரும்பினர்.

இதன் காரணமாக ஐடியா, வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். உதாரணத்திற்கு ஏர்செல் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. இந்த ஒரு தருணத்தில் நிலைமையை சமாளிக்கவும் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்காகவும் வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் அவ்வப்போது சில சலுகைகளை வழங்கி அறிவிப்பு வெளியிட்டு தங்களது வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்துக் கொண்டு இருந்தபோதிலும், நாளுக்குநாள் ஜியோவின் சேவையை பயன்படுத்துபவர்கள் அதிகமாகிக் கொண்டே இருந்தனர்.

இந்தநிலையில் சமீபத்தில் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தங்களது சேவைக்கான கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் பின்னர் அடுத்தநாளே ஜியோவும் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் ஜியோவை பயன்படுத்தும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஜியோ அறிவிப்பில்,"சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேவையான கட்டணம் அதிகரிக்கப்படும்". இதனால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாது; மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை போலவே ஜியோவும் அரசுடன் இணைந்து செயல்படும் என தெரிவித்து உள்ளது. 

இதன் மூலம் விரைவில், ஜியோ கட்டணம் விவரம் வெளியாக உள்ளது. ஆனால் ஜியோ  வருகையின் போது அறிவித்த அறிவிப்பு படி, இலவச சலுகை வழங்கப்படும் என்ற சொல், கட்டண விவரம் வெளியாகும் பொருட்டு அது வாடிக்கையாளர்களுக்கு மாபெரும் ஏமாற்றமாக இருக்கும்  என்பதை யாராலும் மறுக்க முடியாது.   

click me!