ஆன்மீக வழிபாட்டில் இப்படி ஒரு விஷயம் இருப்பது உங்களுக்கு தெரியுமா..?

thenmozhi g   | Asianet News
Published : Jan 25, 2020, 11:34 PM IST
ஆன்மீக வழிபாட்டில் இப்படி ஒரு விஷயம் இருப்பது உங்களுக்கு தெரியுமா..?

சுருக்கம்

ஒவ்வொருவருக்கும் ஒரு சில விஷயங்களில் நம்பிக்கை வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும். ஒரு சிலருக்கு ஏதோ ஒரு சக்தி நம்மி சுற்றி இயங்குகிறது என நினைப்பார்கள்.

ஆன்மீக வழிபாட்டில் இப்படி ஒரு விஷயம் இருப்பது உங்களுக்கு தெரியுமா..? 

ஒவ்வொருவருக்கும் ஒரு சில விஷயங்களில் நம்பிக்கை வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும். ஒரு சிலருக்கு ஏதோ ஒரு சக்தி நம்மி சுற்றி இயங்குகிறது என நினைப்பார்கள். இதை எல்லாம் மீறி, இறை நம்பிக்கை வைத்திருப்பவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண ஆன்மீக  வழிபாட்டில் ஈடுபடுவார்கள் 

அதன் படி, சில விஷயங்கள் மற்றும் சில காரியங்களில் இறங்கும் முன் கடவுளை வணங்கி தொடங்குவது நல்லது அல்லாவா..? அப்படி எந்த காரியம் நடைபெற எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பார்க்கலாமா..?

இடையூறு நீங்க - விநாயகரை வணங்க வேண்டும்.

செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர், ஸ்ரீ லக்ஷ்மியை வணங்க வேண்டும் 

நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும்.

வீடும் நிலமும் சேர - செவ்வாய் பகவான், ஸ்ரீ சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.

ஆயுள் முழுவதும் ஆரோக்கியம் பெற - ருத்திரனையும்,

மனவலிமை உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சனேயரையும் வணங்க வேண்டும்.

கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.

திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன் மற்றும் துர்க்கை அம்மனை வணங்க வேண்டும்.

மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரியை வணங்கவேண்டும்.

புத்திர பாக்கியம் பெற  - சந்தான லெட்சுமியும், சந்தான கிருஷ்ணனையும் வணங்க  வேண்டும்.

தொழில் சிறந்து லாபம் பெற  - திருப்பதி வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.

புதிய தொழில் துவங்க - ஸ்ரீ கஜலட்சுமியை வணங்க வேண்டும். 

விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி வணங்கவேண்டும்.

சாப்பாட்டு கஷ்டம் நீங்க -  ஸ்ரீ அன்னபூரணியை வணங்க வேண்டும் 

வழக்குகளில் வெற்றி பெற  - விநாயகரை வணங்க வேண்டும்

சனி தோஷம் நீங்க -  ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் வணங்க வேண்டும்

பகைவர் தொல்லை நீங்க -  திருச்செந்தூர் முருகன் சஷ்டி விரதம் இருக்க வேண்டும்.

பில்லி சூனியம் செய்வினை அகல -  ஸ்ரீ வீரமாகாளி, சக்கரத்தாழ்வார் ,ஸ்ரீ நரசிம்மரை வணங்க வேண்டும்.

திருஷ்டி விலக வேண்டும் என்றால், முத்துமாரி அம்மனை வணங்க வேண்டும்.

அழியா செல்வம் ஞானம் சக்தி பெற சிவஸ்துதி செய்ய வேண்டும்.

இறை நம்பிக்கை கொண்டவர்கள் இன்றளவும் முறையான வழிபாட்டை மேற்கொண்டு அவர்களது  நம்பிக்கைக்கு ஏற்ப விரதம் இருப்பது வழக்கம்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்