வங்கியில் எத்தனை கோடி பணம் டெபாசிட் செய்தாலும் கிடைக்கப்போகும் காப்பீட்டு தொகை "ஒரு லட்சம்" மட்டுமே...! தெரியுமா இந்த சங்கதி..?

By ezhil mozhiFirst Published Dec 4, 2019, 1:17 PM IST
Highlights

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிடிஐ ரிசர்வ் வங்கியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் கிடைத்து உள்ளது. அதில் டெபாசிட் செய்துள்ள பணத்தின் அடிப்படையில் வட்டியையும் கணக்கிட்டு ஒரு லட்சம் வரை காப்பீடு வழங்கலாம் என தெரிவித்துள்ளது. 

வங்கியில் எத்தனை கோடி பணம் டெபாசிட் செய்தாலும் கிடைக்கப்போகும் காப்பீட்டு தொகை "ஒரு லட்சம்" மட்டுமே...!  தெரியுமா இந்த சங்கதி..?  

கையில் பணம் சற்று அதிகமாக இருந்தால், பாதுகாப்பு கருதி வங்கியில் டெபாசிட் செய்வது தான் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். அதில் சிறிதளவு வட்டியும் கிடைக்கும் என்பது கூடுதலாக கிடைக்கக்கூடிய நன்மை என்று சொல்லலாம்.

இந்த ஒரு நிலையில்  ஓர் அதிர்ச்சி தரும் விஷயமாக அமைந்துள்ளது, "வங்கியில் எத்தனை கோடி பணம் டெபாசிட் செய்தாலும் கிடைக்கப்போகும் காப்பீட்டு தொகை ஒரு லட்சம் மட்டுமே என்ற ஓர் செய்தி". அதாவது, வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டாலோ அல்லது வங்கி பணம் தர முடியாத சூழல் ஏற்பட்டாலோ அல்லது வங்கி உரிமம் ரத்து ஆனாகலோ வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்துள்ள பணத்திற்கு ஈடாக அதிகபட்சம் ஒரு லட்சம் மட்டுமே பெற முடியும் என்ற தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தகவலை ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்க கூடிய டிஐசிஜிசி தெரிவித்து உள்ளது 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிடிஐ ரிசர்வ் வங்கியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் கிடைத்து உள்ளது. அதில் டெபாசிட் செய்துள்ள பணத்தின் அடிப்படையில் வட்டியையும் கணக்கிட்டு ஒரு லட்சம் வரை காப்பீடு வழங்கலாம் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் டிஎம்சி வங்கி மோசடியை அடுத்து காப்பீடு தொகையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என்ற பரிசீலனையும் செய்யப்ப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள், உள்ளூர் வங்கிகள், மண்டல கிராம வங்கிகள் ஆகியவற்றுக்கும் டிஐசிஜிசி அமைப்பு காப்பீடு பொருந்தும். இன்னொரு விஷயம் என்னவென்றால் வங்கி மோசடியும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதன் மூலம் வங்கியில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்து இருங்தாலும் ஒரு முறை திவாலானால்  நமக்கு கிடைக்கக்கூடிய காப்பீட்டு தொகை வெறும் ஒரு லடசம் மட்டுமே என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். 

click me!