தமிழகத்தில் மழை..! அறிவிப்பை வெளியிட்டது சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Published : Feb 15, 2019, 03:34 PM IST
தமிழகத்தில் மழை..! அறிவிப்பை வெளியிட்டது சென்னை வானிலை  ஆய்வு மையம்..!

சுருக்கம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அடுத்து வரும் நாட்களில் வெப்பம் அதிகரித்து இடி மின்னலுடன் கூடிய மழை வர வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியசும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதலே வெப்பம் சுட்டெரித்த வண்ணம் உள்ளது. ஆனால் நாளை வெப்பத்தின் அளவு சற்று குறைவாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்