அதிர்ச்சி ரிப்போர்ட் : டிவி பார்ப்பது 2 மணி நேரமா ?4 மணி நேரமா.. ? இதய அடைப்பை தடுக்கலாமே..!

By ezhil mozhiFirst Published Jul 5, 2019, 6:12 PM IST
Highlights

தொலைக்காட்சி பார்க்கும் நபர்களுக்கு மிக விரைவில் இதய நோய்கள் (இதய அடைப்பு,ரத்த குழாய் வெடிப்பு ) ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதிர்ச்சி ரிப்போர்ட் : டிவி பார்ப்பது 2 மணி நேரமா ? 4 மணி நேரமா.. ?  இதய அடைப்பை தடுக்கலாமே..!

தொலைக்காட்சி பார்க்கும் நபர்களுக்கு மிக விரைவில் இதய நோய்கள் (இதய அடைப்பு,ரத்த குழாய் வெடிப்பு ) ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் the Journal of the American Heart Association இதழில் இது குறித்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா யூனிவர்சிட்டி மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரமோ அல்லது நான்கு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்தவண்ணம் பொழுதை போக்கினாலோ அல்லது வேலை நிமித்தமாக தொலைக்காட்சியைப் பார்த்து வந்தாலோ அவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, 50 சதவீத அதிக வாய்ப்பை பெறுகின்றனர்.

அதாவது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமோ அல்லது அதற்கு குறைவான நேரத்தில் டிவி பார்ப்பவர்களுடன் நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக டிவி பார்ப்பவர்களை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த வித்தியாசம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரே  இடத்தில் அமர்ந்து அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் கொண்டவர்கள் சற்று குறைத்து கொள்வது  நல்லது

click me!